மாதவிடாய் சுழற்சி வரும்போதெல்லாம் சில உபாதைகளும் சேர்ந்து கூடவே வர செய்யும்.
வயிறு வலி, முதுகு வலி, தசைபிடிப்பு, கை, கால் சோர்வு, உடல் வலி போன்றவற்றால் பெரும் அவஸ்தையாக தான் இருக்கும்.
அதிலும் சில பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் இலேசான தலைசுற்றல் காணப்படும்.
இருப்பினும் இது பொதுவான விஷயம் அல்ல. ஏனெனில் மாதவிடாய் நேரத்தில் தலை சுற்றுவதற்கு ஹார்மோன் மாற்றங்களும் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகின்றது.
அதேசமயம் இதற்கு வேறு பல காரணங்களும் கூறப்படுகின்றது. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
- புரோஸ்டாக்லாண்டின் என்ற வலியை தூண்டும் ஹார்மோன்கள் உடல் முழுவதும் இருக்கும் ரத்த நாளங்களை கட்டுப்படுத்த கூடும். கருப்பை தசைகளை சுருக்க செய்யும். இது தலைவலியையும் மற்றூம் இலேசான தலை சுற்றல் உணர்வையும் உண்டாக்க கூடும்.
- மாதவிடாய் காலத்தில் தசைப்பிடிப்பு என்பது இயல்பானது. இந்த பிடிப்புகளின் போது வரக்கூடிய வலி கடுமையாக இருக்கும் போது இலேசான தலைச்சுற்றலை உணரலாம். மாதவிடாய் பிடிப்புகள் வலி மோசமாக இருக்கும் போது உங்களால் தலைச்சுற்றலை உணரக்கூடும்.
- premenstrual-dysphoric-disorder இது மிக கொடுமையானது மாதவிடாய் நாட்களில் அன்றாட பணியை கூட செய்ய முடியாத அளவுக்கு நாட்களை மோசமாக நகர்த்தும். மாதவிடாய் நாட்களில் சில நாட்கள் வரை இந்த வலி நீடிக்க கூடும். இது இலேசான தலைவலி தலைச்சுற்றலை உண்டாக்கும். இதற்கான காரணம் கண்டறியப்படவில்லை.
- உடல் முழுவதும் போதுமான் ஆக்ஸிஜனை எடுத்து செல்ல போதுமான ரத்த சிவப்பு அணுக்கள் இல்லாத நிலை. இந்த குறைபாடு இருக்கும் போது தலைச்சுற்றல் இருக்கலாம். மேலும் மாதவிடாய் காலத்தில் அதிக ரத்த போக்கையும் உண்டாக்கும். இந்த ரத்த சோகை குறைபாட்டால் தலைச்சுற்றலை உணரக்கூடும்.
- ஈஸ்ட்ரோஜனின் ஏற்ற இறக்கமான அளவுகள் ஒற்றைத்தலைவலியை தூண்டுகிறது. இது மாதவிடாய் காலத்துக்கு முன்பு அல்லது அந்த நாட்களின் போது இது உண்டாகலாம். மற்ற தலைவலிகளை போலவே மாதவிடாய் காலத்தில் வரக்கூடிய இந்த தலைவலி ஒரு பக்கமாக துடிக்கிறது. இதுவும் இலேசான தலைச்சுற்றலை உணரக்கூடும்.
- உடலை எப்போதும் நீரேற்றமாக வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் அவை மாதவிடாய் கால உபாதையை மேலும் அதிகரிக்க செய்யும். உடலில் நீர்ச்சத்து குறையும் போது தலைச்சுற்றலை உணர செய்யும்.
- ரத்த அழுத்தம் குறைவாக இருப்பதும் தலைச்சுற்றலுக்கு காரணமாக இருக்கலாம். உடல் பலவீனம் காரணமாக சிலருக்கு மாதவிடாய் காலங்களில் ரத்த அழுத்தம் குறைய கூடும். இது இலேசான தலைவலி அல்லது தலைச்சுற்றலை உண்டாக்குகிறது.
- மாதவிடாய் காலத்தில் ஹார்மோன்கள் மாற்றமானது ரத்த சர்க்கரை அளவையும் பாதிக்கும். அதனால் மாதவிடாய்க்கு முன்பும் பின்பும் உண்டாகும் இந்த மாற்றம் ரத்த சர்க்கரை அளவை குறைக்க செய்யும். ஏனெனில் ஈஸ்ட்ரோஜன் இன்சுலின் உணர்திறனை அதிகமாக மாற்றும். இந்த பிரச்சனையை நீரிழிவு இல்லாத ஆரோக்கியமானவர்களை காட்டிலும் நீரிழிவு இருக்கும் பெண்கள் அதிகமாக பாதிப்பை கொண்டிருப்பார்கள்.
0 Comments
No Comments Here ..