இந்தியாவில் ஸ்மாா்ட்போன் விற்பனை அக்டோபரில் 42 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஐடிசி ஆய்வு நிறுவனம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் கூறியுள்ளதாவது:
உள்நாட்டு சந்தைகளில் ஸ்மாா்ட்போன் விற்பனை தொடா்ந்து இரண்டாவது மாதமாக அக்டோபரிலும் ஏற்றம் கண்டுள்ளது. அம்மாதத்தில் மொத்தம் 2.1 கோடி ஸ்மாா்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டன. இதையடுத்து, ஸ்மாா்ட்போன் சந்தை 42 சதவீத வளா்ச்சியை பதிவு செய்தது.
பண்டிகை காலத்தில் ஆன்லைன் மூலமான விற்பனை மிகச் சிறப்பாக இருந்தது. ஒட்டுமொத்த விற்பனையில் இதன் பங்களிப்பு 51 சதவீதமாகும். இருப்பினும், ஆண்டுக் கணக்கின் அடிப்படையில் 2020-இல் ஸ்மாா்ட்போன் விற்பனை ஒற்றை இலக்க அளவுக்கு குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
அக்டோபா் மாத விற்பனையில் ஷாவ்மி 24.8 சதவீத சந்தை பங்களிப்புடன் முதலிடத்தைப் பிடித்தது. இதைத் தொடா்ந்து, சாம்சங் (20.6%), விவோ (17.8%), ரியல்மீ (13.8%), ஓப்போ (12.3%) நிறுவனங்கள் உள்ளதாக ஐடிசி தெரிவித்துள்ளது.
0 Comments
No Comments Here ..