தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொறடா பதவியிலிருந்து சி.சிறிதரன் விலகியுள்ளதாக அறிவித்துள்ளார்
இது தொடர்பில் அவர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
கொறடா பதவியிலிிருந்து விலகுவதாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் தெரிவித்து விட்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கொறடா, பேச்சாளர் பதவிகளை கூட்டமைப்பின் பங்காளிகளுடன் பகிர்வதற்கு எம்.ஏ.சுமந்திரன் அணி மறுத்து வந்திருந்தது. இரா.சம்பந்தன் கூட்டமைப்பின் உள்சுற்று பேச்சுக்களில் அதற்கு தீர்வு காண முயற்சித்தபோது, எம்.ஏ.சுமந்திரன் அணியினர் அதை ஏற்றுக்கொள்ளாமலிருந்தனர். இந்த விவகாரங்கள் ஊடகங்களில் பகிரங்கமாக தொடங்கியதையடுத்து, சிறிதரன் பதவிவிலகுவதாக அறிவித்துள்ளார்.
கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளிற்கு நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு நியாயமாக நேரத்தை பகிர்ந்து வழங்குவதில்லையென்ற காரணத்தை குறிப்பிட்டு, சிறிதரன் அந்த பொறுப்பிலிருந்து விலக வேண்டுமென பங்காளிக்கட்சிகள் வலியுறுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.













0 Comments
No Comments Here ..