31,Oct 2026 (Sat)
  
CH
இலங்கை செய்தி

கோட்டபாய அரசாங்கத்திற்கு சுமந்திரன் தயாரித்த வரபை நிராகரித்த விக்னேஸ்வரன்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு மீளவும் கால அவகாசத்தை பெற்றுக்கொடுக்கும் விதமாக எம்.ஏ.சுமந்திரன் தயாரித்த வரைபை நிராகரிப்பதாக அறிவித்துள்ளார் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன்.

இது தொடர்பாக எம்.ஏ.சுமந்திரனிற்கு அவர் பகிரங்கமாக கடிதமொன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.

அவரது கடிதத்தில்

அன்புள்ள சுமந்திரன் அறிவது,

எனது பார்வைக்காக என்னிடம் கையளித்த ஆவணத்திற்கு நன்றி. அது ஐக்கியநாடுகள் உயர் ஸ்தானிகருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அங்கத்தவர்களுக்குமான கடிதத்தின் முதல் வரைவாகும்.

அதன் முதல் ஐந்து பக்கங்களிலும் நீங்கள் குறிப்பிட்டிருப்பவை அனைத்தும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினர் முற்றிலும் அறிந்த விடயங்களே. அம்முதல் வரைவின் முன்னுரையில் நீங்கள் இருசாராரும் இயற்றிய மனித உரிமை மீறல்கள் பற்றிக் கூறியுள்ளீர்கள். நாங்கள் இவ்விடயத்தில் புறநிலை கூர் நோக்கர்களாக இருக்க வேண்டுமா அல்லது சுய நிலை முறைப்பாட்டாளர்களாக மாற வேண்டுமா என்பதில் எனக்கு மயக்கம் இருக்கின்றது.

எது எவ்வாறு இருப்பினும் உங்களால் பரிந்துரைக்கப்பட்ட ஒரேயொரு திடமான செயற்பாடானது இதுவரை காலமும் தோல்வியைத் தழுவிய கூட்டத் தீர்மானம் போன்ற பிறிதொரு கூட்டத் தீர்மானத்தை மீண்டும் கொண்டு வருவதாகும். அதுவும் இலங்கை அரசாங்கம் ஒற்றுமைக் கூட்டத் தீர்மானமானமாக முன்னர் கொண்டு வந்த தீர்மானத்தில் இருந்து பின்வாங்கிய பின்னர் இவ்வாறான ஒரு கருத்தை வெளியிட்டுள்ளீர்கள்.

மீண்டும் காலக்கேடு விதிப்பதால் தற்போதைய நிலை மாறும் என்று எவ்வாறு முடிவுக்கு வந்துள்ளீர்கள்? உண்மையில் மேலும் காலக்கேடு அளித்தால் இன்றைய அரசாங்கமானது தமிழ், முஸ்லீம் சமூகங்களை இனி இல்லை என்று ஆக்கிவிடுவார்கள் என்பதைஉணர்ந்தீர்களா? அதுதான் தற்போது நடந்து கொண்டிருக்கின்றது. நீங்கள் உங்கள் முதல் வரைவில் மிகச் சரியாகப் பின்வருமாறு கூறியுள்ளீர்கள்




கோட்டபாய அரசாங்கத்திற்கு சுமந்திரன் தயாரித்த வரபை நிராகரித்த விக்னேஸ்வரன்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு