கொரோனாவால் உயிரிழக்கின்ற முஸ்லிம்களின் சரீரங்களை அவர்களது கலாசாரத்தை புறந்தள்ளி தகனம் செய்வதற்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றிருந்தது.
இதன்போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக, தமிழ் தேசிய கூட்டமைப்பு கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
கொரோனாவால் இறக்கின்றவர்களின் சரீரத்தை பாதுகாப்பான முறையில் அடக்கம் செய்வதன் ஊடாக, எந்த பாதிப்பும் ஏற்படாது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முஸ்லிம்கள் தங்களது கலாசாரத்தின் அடிப்படையில் கொரோனாவால் உயிரிழந்தோரின் சரீரங்களை புதைப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்.
இதற்கு முஸ்லிம் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி விரைவான தீர்மானம் ஒன்றுக்கு வர வேண்டும் என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அதேநேரம், அரசியல் யாப்புக்கான தங்களது பரிந்துரைகளை விரைவாக முன்வைப்பதற்கும், ஜெனீவா மனித உரிமைகள் பேரவை விடயத்தில் தமிழ் கட்சிகளுக்கு இடையில் ஒரு பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கும் நேற்று இடம்பெற்ற நாடாளுமன்றக் குழுக்கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானம் மேற்கொண்டது.













0 Comments
No Comments Here ..