22,Jun 2026 (Mon)
  
CH
இலங்கை செய்தி

தம்மிக்க பண்டாரவின் கொரோனா தடுப்பு மருந்திற்கு தொடரும் மக்கள் படை!

கேகாலையில் தம்மிக்க பண்டார என்பவரினால் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து எனக் கூறப்படும் பாணியை பெற்றுக்கொள்வதற்காக கேகாலை - உடுகும்புற பிரதேசத்திற்கு நேற்று பெருமளவான பொதுமக்கள் சென்றுள்ளனர்.

இதன் காரணமாக அந்த இடத்தில் அமைதியற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து காவல்துறையினரும், சுகாதார அதிகாரிகளும் பொதுமக்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி அங்கு பொதுமக்கள் ஒன்று கூடியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






தம்மிக்க பண்டாரவின் கொரோனா தடுப்பு மருந்திற்கு தொடரும் மக்கள் படை!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு