ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் பிறந்த நாள் பரிசாக நகரி எம்.எல்.ஏ ரோஜா தாய், தந்தை அற்ற ஒரு ஏழை பெண் ஒருவரை திங்கள்கிழமை காலை தத்தெடுத்தார்.
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு திங்கள்கிழமை பிறந்த நாள். அவரின் பிறந்த நாளை அக்கட்சியினர் மிகவும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். பலர் ரத்த தான முகாம், மிதிவண்டி ராலிகள், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், அன்னதானம் உள்ளிட்டவற்றை நடத்தினர்.
ஆனால் நகரி தொகுதியின் எம்.எல்.ஏ வான நடிகை ரோஜா ஒருபடி மேலே சென்று ஒரு ஏழை பெண்ணை தத்தெடுத்துக் கொண்டார்.
கடந்த 8ஆம் தேதி திருப்பதியில் உள்ள அரசு பெண்கள் காப்பகத்தை பார்வையிட்ட அவர் இந்த முடிவை மேற்கொண்டார். காப்பகத்தை பார்வையிடும் போது அங்குள்ள மேற்பார்வையாளர்கள், ஆசிரியர்கள், பெண்கள் நேரடியாக உரையாடி அவர்களின் தேவைகளை கேட்டறிந்தார்.
அப்போது நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று நீதி நெருக்கடியால் தன் மருத்துவப் படிப்பை தொடர முடியாமல் போன புஷ்பகுமாரி என்ற பெண்ணை தேர்ந்தெடுத்தார்.
அவரின் எதிர்கால நலன் கருதி அப்பெண்ணை தத்தெடுத்துக் கொள்ள முடிவு செய்தார். அதற்கான அதிகாரபூர்வ பணிகளை செய்ய காப்பக அதிகாரிகளுக்கு அவர் உத்திரவிட்டார்.
அப்பெண்ணின் மருத்துவ படிப்பிற்கான மொத்த செலவையும் தானே ஏற்றுக் கொள்ளவதாக கூறிய அவர், ஆந்திர முதல்வரின் பிறந்த நாளின் போது அவருக்கு பரிசளிக்கும் விதம் ஆதரவில்லாத ஏழை பெண்ணின் நல்வாழ்விற்காக இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்தார்.
இது இணையளதங்ளில் மட்டுமல்ல, அனைத்து இடங்களிலும் அவரின் இச்செய்கைக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
0 Comments
No Comments Here ..