அந்த போன் வந்தாலே சித்ரா பதட்டமாயிடுவாராம்.. தனியா போய் பேசுவாராம் என்று ஹேமந்தின் அப்பா தன் புகாரில் குறிப்பிட்டிருக்கிறார்.. மற்றொரு பக்கம், பாவம் சித்ரா, இத்தனை அபாண்டத்தை இறந்து போன பெண் மீது சுமத்தாதீங்க என்று சோஷியல் மீடியாவில் சித்ராவின் நட்புக்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
சித்ரா இறந்து 10 நாட்களுக்கு மேலாகியும் அதன் பரபரப்பு இன்னமும் அடங்கவில்லை.. அவர் எப்படி இறந்தார் என்பது தெரியாமல்தான் நித்தம் ஒரு யூகங்கள் கிளம்பி வருகிறது.
தன் மகள் மரணத்துக்கு நியாயம் வேண்டும், என் மகளை அடிச்சே கொன்னுட்டான்.. இது சம்பந்தமாக சிபிஐ வரை போவோம் என்று சித்ரா பெற்றோர் கொந்தளிக்கின்றனர்.
மற்றொரு பக்கம், "ஒரு சில நம்பரில் இருந்து போன் வந்தால் சித்ரா பதட்டத்துடன் தனியாக சென்று பேசுவார் என்றும், அந்த எண்களை அழித்துவிடுவார் என்றும் என் மகன் ஹேம்நாத் என்னிடம் ஏற்கனவே சொல்லி உள்ளார், அதனால், அதன் அடிப்படையில், சித்ராவை மிரட்டிய நபர்களை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று ஹேமந்தின் அப்பா ஒரு பக்கம் புகார் தந்துள்ளார்.
ஆக, இரு தரப்புமே சித்ராவுக்கு நியாயம் கேட்டு வரும் நிலையில், சித்ராவின் நட்புக்களும், ரசிகர்களும் கண்ணீர் கோரிக்கையை சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர்.. "தயவுசெய்து இனிமேல் சித்ரா மீது யாரும் அபாண்டமாக பழியை போடாதீங்க.. அது பாவம்.. இறந்துபோன பெண்ணை பற்றி தப்பா பேசாதீங்க, நடிகை என்றாலே தவறான முத்திரைதானா? உழைத்து யாருமே மேலே வர மாட்டாங்களா? இறந்து போன ஒரு நபரை விமர்சிப்பது அநாகரீகம் என்றுகூட தெரியாதா?
மீடியாவில் சித்ரா பற்றி தவறான செய்திகள் வருவதை பார்க்க கஷ்டமாக இருக்கிறது.. மீடியாக்கள் உண்மை தன்மையை தெரிந்து கொண்டு அதனை மட்டும் வெளிப்படுத்த வேண்டும்"என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். அத்துடன், சித்ராவின், கடைசி நாள் சீரியலின் ஷூட்டிங் வீடியோ, போட்டோக்களையும் வைரலாக்கி வருகின்றனர்.
0 Comments
No Comments Here ..