ஆஸ்திரேலியாகின் ஆகப் பெரிய நகரமான சிட்னியில், கிறிஸ்துமஸை முன்னிட்டு முடக்கநிலை தளர்த்தப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 8 பேரிடம் மட்டும் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டதால், முடக்கநிலையைத் தளர்த்த முடிவெடுக்கப்பட்டது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு, குடியிருப்பாளர்கள், விருந்தினர்கள் சிலரையாவது வீட்டிற்கு வரவேற்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிட்னியில் உள்ள பெரும்பாலான குடியிருப்பாளர்கள், அதிகபட்சமாக 10 விருந்தினர்கள்வரை வீட்டிற்கு அழைத்து உபசரிக்க அனுமதிக்கப்படுவர். எனினும், கிருமித்தொற்று அதிகம் உள்ள Northern Beaches பகுதியில், ஐந்து விருந்தினர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்குமுன் முடக்கநிலையின்போது கிட்டத்தட்ட கால் மில்லியன் குடியிருப்பாளர்கள், வீட்டில் தங்கியிருக்குமாறு உத்தரவிடப்பட்டது.
0 Comments
No Comments Here ..