இயேசு பிரானின் பிறப்பை கொண்டாடும் நத்தார் பண்டிகை இன்று நள்ளிரவு உதயமாகிறது.
கொரோனா வைரஸ் தொற்று உலக மக்கள் அனைவருக்கும் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தினால் நத்தார் பண்டிகையை இந்தமுறை சுகாதார விதிமுறைகளுக்கு அமைய கொண்டாட வேண்டிய நிலை பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
கொழும்பு நகரின் சில பாகங்களில் மாத்திரம் இந்தமுறை நத்தார் தின வரவேற்பு கொண்டாட்டங்கள் இடம்பெறவுள்ளன.
அத்துடன் தனிமைப்படுத்தப்படாத பகுதிகளில் 50 இற்கும் குறைவானவர்களுடன் நத்தார் ஆரதானைகளை நடத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
இந்த வருடம் ஆராதளைகளினால் மாத்திரமே நத்தார் பண்டிகை கொண்டாடப்படவுள்ளதாகம் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களுக்கு உட்பட்டவாரே ஆராதனைகள் இடம்பெறவுள்ளதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நத்தார் ஆராதனைகளை நடத்தும் தேவாலயங்களுக்கு இன்றும், நாளையும் விசேட பாதுகாப்பு வழங்க காவல்துறைமா அதிபர் உத்தரவிட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
0 Comments
No Comments Here ..