கிளிநொச்சி - கல்மடுக் குளத்தில் நீரில் மூழ்கி காணாமல் போனவர் சடலமாக இன்று மீட்கப்பட்டுள்ளார்.
கல்மடு நகர் சம்புக்குளம் பகுதியை சேர்ந்த 27 வயதுடைய இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று பிற்பகல் 3 மணியளவில் குறித்த நபர் மூன்று பேருடன் குளத்திற்கு சென்றிருந்த நிலையில் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தார்.
இந்தநிலையில் பிரதேச மக்கள் உள்ளிட்ட தரப்பினர் அவரை தேடும் பணிகளை முன்னெடுத்திருந்த நிலையில் இன்று முற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்
0 Comments
No Comments Here ..