15,Jan 2025 (Wed)
  
CH
இந்திய செய்தி

கொரோனா தடுப்பூசி போடுவதற்கான முன்னோட்டத்தை 4 மாநிலங்களில் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது

மத்திய அரசு விடுத்துள்ள அறிக்கையில், ஆந்திரா, அசாம், குஜராத், பஞ்சாப் மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான முன்னோட்ட நடவடிக்கை அடுத்த வாரம் நடைபெறுமென கூறப்பட்டுள்ளது.

தடுப்பூசியை விமான நிலையங்களில் இருந்து சம்மந்தப்பட்ட மாவட்டங்கள், மாவட்டங்களிருந்து கிராமங்கள், அங்கிருந்து சுகாதார மையங்கள், மருத்துவமனைகளுக்கு எப்படி கொண்டு செல்வது, எப்படி பதப்படுத்தி குளிர்பதன கிடங்குகளில் வைப்பது, அதன் பிறகு எப்படி மக்களுக்கு தடுப்பூசி போடுவது என்பது குறித்து நான்கு மாநிலங்களிலும் 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் ஒத்திகை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பு மருந்து உலகின் கவனத்தை ஈர்த்துள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. இந்த மருந்தின் மூன்றாம் கட்டச் சோதனை 22 இடங்களில் நடைபெற உள்ள நிலையில், அதற்குத் தன்னார்வலர்களை வரவேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறிவித்துள்ளது.

கோவாக்சின் தடுப்பு மருந்து முதல் இரண்டு கட்டச் சோதனைகளில் இருந்து பாதுகாப்பு, நோய் எதிர்ப்புத் திறன் ஆகியவற்றில் சிறந்தது எனத் தெரியவந்துள்ளதால் இது குறித்த கட்டுரையை வெளியிட மருத்துவ இதழான லேன்சட் ஆர்வத்துடன் உள்ளதாகவும் ஐசிஎம்ஆர் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளது.




கொரோனா தடுப்பூசி போடுவதற்கான முன்னோட்டத்தை 4 மாநிலங்களில் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு