22,May 2025 (Thu)
  
CH
பொழுதுபோக்கு

பெண் குழந்தைக்கு ஆசைப்பட்ட தம்பதிக்கு வரிசையாக பிறந்த 14 ஆண் குழந்தைகள்

அமெரிக்காவில் ஒரு தம்பதி 14 ஆண் குழந்தைகளுக்கு பிறகு தற்போது பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

மிச்சிகனில் வசிக்கும் கட்டேரி மற்றும் ஜே ஸ்க்வாண்ட் தம்பதிக்கு பெண் குழந்தை என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் தங்களுக்கு பெண் குழந்தை பிறக்க வேண்டும் என ஆசைப்பட்டுள்ளனர்.

ஆனால் அவர்களுக்கு வரிசையாக ஆண் குழந்தைகள் தான் பிறந்துள்ளது. இருப்பினும் பெண் குழந்தை வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்துள்ளனர். இந்நிலையில் 27 ஆண்டுகளுக்கு பிறகு அவர்களது ஆசை நிறைவேறியுள்ளது. 14 ஆண் குழந்தைகளுக்கு பிறகு அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளனர்.

45 வயதான இந்த பெண்மணி கடந்த நவம்பர் மாதம் பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இந்தக் குழந்தைக்கு மேகி ஜெய்னே என பெயர் வைத்துள்ளனர்.

2020ம் ஆண்டில் தங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு இது என தம்பதியர் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் இந்த தம்பதிக்கு குழந்தை பிறக்கும் போதும் செய்திகளில் இவர்கள் இடம்பெற தவறுவதில்லை.

அந்த தம்பதிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்துள்ளது




பெண் குழந்தைக்கு ஆசைப்பட்ட தம்பதிக்கு வரிசையாக பிறந்த 14 ஆண் குழந்தைகள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு