உக்ரைனை சேர்ந்த முதல் தொகுதி சுற்றுலா பயணிகள் இன்று இலங்கைக்கு சுற்றுலா செல்கின்றனர்
கொரோனா பெருந்தொற்றினால் செயலிழந்துள்ள சுற்றுலாத்துறைக்கு உயிர்கொடுக்கும் விதமாக, பயண பாதுகாப்பு வளைய திட்டத்தை அரசு செயற்படுத்துகிறது.
இதன்படி, முதல் தொகுதி சுற்றுலா பயணிகள் இன்று உக்ரைனிலிருந்து 214 பயணிகள் வருகிறார்கள். மத்தள விமான நிலையத்திற்கு வரும் அவர்களை, பயண பாதுகாப்பு வளையத்திற்குள் உள்வாங்கும் ஏற்பாடுகளிற்கான முன்னாயத்தங்கள் நேற்று மத்தள விமான நிலையத்தில் இடம்பெற்றது.
பெந்தோட்டை, கோகலை மற்றும் பேருவலவில் செயற்படுத்தப்படும் பயண பாதுகாப்பு வளைய திட்டத்தில் அவர்கள் தங்கிருப்பர்.













0 Comments
No Comments Here ..