16,Jan 2025 (Thu)
  
CH
இலங்கை செய்தி

3 வயது குழந்தையுடன் கிணற்றில் குதித்து உயிரை மாய்த்த தாய்!

வவுனியா பறண்நட்டகல் பகுதியில் 3 வயதான தனது குழந்தையுடன் கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துள்ளார் தாயொருவர். இன்று இருவரது சடலங்களை ஓமந்தை காவல்துறை மீட்டுள்ளனர்.

குறித்த இருவரும் நேற்று (27) அவர்களது வீட்டில் இருந்துள்ளனர். எனினும் இரவு 12 மணியவிளவில் காணாமல் போயிருந்த நிலையில் ஊர்மக்கள் மற்றும் உறவினர்கள் அவர்களை தேடியுள்ளனர். இந்நிலையில் இன்று (28) காலை வீட்டுக்கு அருகில் இருந்த வயல் கிணறு ஒன்றிலிருந்து அவர்கள் இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

குடும்ப தகராறையடுத்து தாயார் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.

சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த 42 வயதான தாயும் அவரது மூன்று வயதான மகளுமே சடலங்களாக மீட்கப்பட்டனர்.




3 வயது குழந்தையுடன் கிணற்றில் குதித்து உயிரை மாய்த்த தாய்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு