இத்தாலியின் பொம்பெயி நகரத்தில் பண்டைக்கால தெருவோர உணவகம் ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். கி.பி 79 இல் எரிமலை வெடித்த காரணத்தினால் இந்த நகரம் மண்ணுக்குள் புதைந்து போனது. ரோமாபுரி கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் வழிப்போக்கர்களுக்காக இந்த உணவகம் இயங்கி இருக்கலாம் என தெரிவித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.
சூடான உணவு பொருட்களை விற்பனை செய்யும் உணவகமாக இது இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது. நேற்று முன்தினம் (சனிக்கிழமை) இந்த கடையை அங்குள்ள REGIO ஐந்தாம் தளத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளது. சுமார் 2000 ஆண்டுகள் பழமையான சுடுமண் கூஜாவில் கடையின் உரிமையாளர் உணவை வைத்துள்ளதையும் இந்த ஆராய்ச்சியில் கணடறியப்பட்டுள்ளது.
உணவகத்தின் முகப்பு வண்ண நிறத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கோழி மற்றும் வாத்தின் படங்களும் வரையப்பட்டுள்ளன. இங்கு கண்டெடுக்கப்பட்ட உணவுகளை ஆய்வுக்கு அனுப்பியுள்ளதாகவும் ஆராச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இறைச்சியை கொண்டு உணவு தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. மேலும் முதன்முறையாக முழுமையான ஒரு உணவகத்தை ஆராய்ச்சியின் மூலம் கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர் ஆய்வு குழுவினர்.
நத்தைகள், செம்மறி ஆட்டு சூப், மீன், கோழி இறைச்சி உணவுகள் இங்கு தயாரிக்கப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்
0 Comments
No Comments Here ..