20,Apr 2024 (Sat)
  
CH
சுவிஸ்

சுவிஸ் சாலை வீதிகளில் ஏற்படவுள்ள புதிய மாற்றங்கள்

அவசர வாகனங்களுக்கு வழிவிடுதல்

2021 ஜனவரி 1ஆம் திகதியிலிருந்து, அவசர வாகனங்கள் வரும் பட்சத்தில் அவைகளுக்கு மற்ற வாகனங்கள் ஒதுங்கி வழிவிடவேண்டும்.

உதாரணத்திற்கு, ஒரு மூன்று வழி சாலையில் வாகனங்கள் செல்லும்போது, அவசர வாகனம் வந்தால், நடுவில் உள்ள சாலையில் செல்லும் வாகனம், வலது புறமோ அல்லது இடது புறமோ விலகி, அவசர வாகனத்துக்கு வழிவிடவேண்டும்.

அப்படி செய்யும்போது எச்சரிக்கை விளக்குகளை எரியவிட்டபடி செய்யவேண்டும். இரண்டு பக்கங்களிலும் உள்ள சாலைகளில் செல்வோரும், அந்த வாகனம் எந்த பக்கம் திரும்புகிறதோ, அதற்கு வழி விட்டு, அதை அனுமதித்து, அதன் பின் செல்லவேண்டும்.

மூடப்பட்ட சாலைகள்

 ஒரு சாலை மூடப்பட்டிருக்குமானால், அந்த சாலையில் உள்ளவர்கள் மற்ற சாலைக்கு வர, மற்ற சாலையில் செல்வோர் அனுமதிக்கவேண்டும்.

வலது புறமாக முன்னேறுதல்

ஒரு சாலையின் இடது ஓரத்தில் வாகனங்கள் வரிசையாக நிற்கும்போது, ஒரு வாகனம் அவற்றை தாண்டி வலதுபுறமாக முன்னேறுதல் இனி சட்டவிரோதமாக கருதப்படாது. என்றாலும், ஒரு சாலையிலிருந்து மற்றொரு சாலைக்கு கடந்து செல்லுதல் சட்டவிரோதமாகும்.

கேரவன்களுக்கான விதிமுறைகள்

2021 ஜனவரி 1ஆம் திகதி முதல், சுவிஸ் சாலைகளில் கேரவன் ஒன்றை இழுத்துச்செல்லும்போது, இப்போதைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள வேகமான மணிக்கு 80 கிலோமீற்றர் வேகம், இனி மணிக்கு 100 கிலோமீற்றராக அதிகரிக்க அனுமதிக்கப்படுகிறது. ஆனால், கேரவன் நல்ல நிலையில் இருப்பது அவசியம்.

புதிய சாரதிகள்

 தனியார் வாகனங்களை ஓட்டுவதற்கு குறைந்த பட்ச வயது 17 ஆக மாற்றப்படுகிறது. 17 வயது முதல் வாகனம் ஓட்ட கற்றுக்கொள்ளும் புதிய வாகன ஓட்டிகள், 18 வயதில் உரிமம் பெற தேர்வுகளை சந்திக்கலாம்.

சைக்கிள் ஓட்டுபவர்களுக்கான விதிமுறைகள்

ட்ராபிக் விளக்குகளில் சிவப்பு விளக்கு எரியும்போது சைக்கிள் ஓட்டுபவர்கள் வலது பக்கம் திரும்பலாம், ஆனால், குறுக்குச் சாலைகள் இருக்கும் பட்சத்தில் மட்டுமே அதற்கு அனுமதி.

வாகன நிறுத்தம்

 2021 ஜனவரி 1ஆம் திகதி முதல், 45 கிலோமீற்றருக்கு அதிக வேகத்தில் செல்லக்கூடியதான மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இ பைக்குகளுக்கு நகர நிர்வாகம் வாகன நிறுத்தக் கட்டணம் வசூலித்துக்கொள்ளலாம்.




சுவிஸ் சாலை வீதிகளில் ஏற்படவுள்ள புதிய மாற்றங்கள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு