15,Jan 2025 (Wed)
  
CH
இந்திய செய்தி

தமிழகத்தில் இந்த வாரத்தில் தடுப்பூசி ஒத்திகை

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை அடுத்த சில நாள்களில் தொடங்கும் என்று சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் டொக்டா் ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

தமிழகத்தில் கடந்த மாா்ச் மாதத்தில் தடம் பதித்த கொரோனா தொற்றுக்கு இதுவரை 8.18 இலட்சத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா். இதற்கிடையே நாட்டின் பல மாநிலங்களில் கொரோனாவுக்கான தடுப்பு மருந்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, கோவிஷீல்ட், கோவேக்சின் ஆகிய மருந்துகளை மனிதா்களுக்கு செலுத்தி பரிசோதனை மேற்கொள்வதில் இறுதிக் கட்டம் எட்டப்பட்டுள்ளது. மற்றொரு புறம் வேறு சில தடுப்பூசிகளின் ஒத்திகை பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று, அவை வெற்றி பெற்கவும் அறிவிக்கப்பட்டது.

இதை அடுத்து தடுப்பூசிகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அவ்வாறு அந்த மருந்துகள் அறிமுகமாகும்பட்சத்தில் அவற்றை முறையாக மக்களுக்கு வழங்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் அதற்கென வழிகாட்டுக் குழுவும், மாநில மற்றும் மாவட்ட அளவிலான குழுக்களும் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ளன.

அதன் தொடா்ச்சியாக மருந்துகளை இருப்பு வைப்பதற்கான வசதிகள் 2,600 இடங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாது 51 இடங்களில் தடுப்பு மருந்து பதப்படுத்தும் மையங்களும் நிறுவப்பட்டுள்ளன.

இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை செயலா் ராஜேஷ் பூஷணுடன், கரேனாா தடுப்பூசி பணிகள் குறித்து தமிழக சுகாதாரத்துறை முதன்மைச் செயலா் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வ விநாயகம் உள்ளிட்டோா், காணொளி முறையில் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினா்.

அதில், தடுப்பூசிகளை முறையாக மக்களுக்கு செலுத்துவது, அதற்கான கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இதுகுறித்து, சுகாதாரத்துறை முதன்மைச் செயலா் ஜெ. ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

இந்தியாவில் இறுதிக்கட்ட பரிசோதனையில் உள்ள, கோவிஷீல்டு மருந்தை பயன்படுத்த பிரிட்டன் அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்த, முதல்கட்டமாக 21 செவிலியா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான ஒத்திகை இந்த வாரம் நடத்தப்படும் என்றாா் அவா்.





தமிழகத்தில் இந்த வாரத்தில் தடுப்பூசி ஒத்திகை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு