15,Jan 2025 (Wed)
  
CH
இலங்கை செய்தி

மேலதிக வகுப்புகளை ஆரம்பிக்க ஆயத்தம்

பாடசாலைகளில் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் ஆரம்பித்த பின்னர் மேலதிக வகுப்புகளை ஆரம்பிக்க தேவையான திட்ட வரைபுகளை தயாரித்து வருவதாக தொற்று நோய் ஆய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

சுகாதார வழிமுறைகளை உரிய வகையில் கடைப்பிடித்து மேலதிக வகுப்புகளை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக தொற்று நோய் ஆய்வு பிரிவின் தலைமை அதிகாரி டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார்.

மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் கடந்த வருடத்தில் வெகுவாக பாதிக்கப்பட்டது. அதனால் மிக விரைவாக கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிக்க வேண்டியது அவசியம். அதற்கான திட்டமிடல்கள் இடம்பெறுகின்றன. 2021 ஆம் ஆண்டில் மாணவர்களின் பாடசாலை கல்வி சுமூகமாக இடம்பெறும் என நம்புகின்றோம். மாணவர்கள் அல்லது ஆசிரியர்கள் எவராவது கொவிட் தொற்றுக்கு உள்ளானால் விரைவாக அவர்களுக்கு சிகிச்சை அளிப்பது எவ்வாறு என்பதை கலந்து ஆலோசித்து தீர்மானிக்கவுள்ளோம். மற்றயது ஏனையவர்களை எவ்வாறு தொற்றிலிருந்து பாதுகாப்பது என்பது குறித்தும் கலந்து முடிவு எடுக்கப்படும். மேலதிக வகுப்புகளை ஆரம்பிக்க வேண்டியது அவசியம். அதற்கமைய மேலதிக வகுப்புகளை ஆரம்பிக்க தேவையான சுகாதார வழிக்காட்டல்கள் தயாரிக்கப்படுகின்றன. 2021 ஆம் ஆண்டு பாடசாலைகள் ஆரம்பிப்பதற்கு இணையாக மேலதிக வகுப்புகளை ஆரம்பிப்பதே எமது நோக்கம்´ என்றார்.




மேலதிக வகுப்புகளை ஆரம்பிக்க ஆயத்தம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு