16,May 2024 (Thu)
  
CH
இலங்கை செய்தி

இலங்கையில் அதிகமான கொரோனா நோயாளிகள் கம்பஹா மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்

நாட்டில் நேற்று அடையாளம் காணப்பட்ட 515 கொரோனா நோயாளர்களில் அதிகமானோர் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.

144 பேர் கம்பஹா மாவட்டத்தில் பதிவானதாக கொவிட்-19 கட்டுப்பாட்டு தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கு அடுத்தபடியாக கண்டி மாவட்டத்தில் 96 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்படும் நோயாளர்களின் எண்ணிக்கையில் நேற்றையதினம் சடுதியான வீழ்ச்சியை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

47 பேர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.

பொலனறுவை மாவட்டத்தில் 43 பேரும், குருநாகல் மற்றும் மாத்தறை மாவட்டங்களில் தலா 33 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 31 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 22 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 12 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 11 பேரும், காலி மாவட்டத்தில் 9 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 7 பேரும், மாத்தளை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் தலா 4 பேரும் பதிவாகியுள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தில் 3 பேரும், மட்டக்களப்பு, மன்னார் மற்றும் மொனராகலை மாவட்டங்களில் தலா ஒவ்வொருவரும் அடையாளம் காணப்பட்டதாக கொவிட்-19 கட்டுப்பாட்டு தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, அம்பகமுவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேலும் 14 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

அம்பகமுவ பதில் மேற்பார்வை சுகாதார பரிசோதகர் எஸ் காமதேவன் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர்களில் 7 பேர் வட்டவளை தோட்ட பகுதியிலும், 3 பேர் வட்டவளை நகரத்திலும், 2 பேர் ஹட்டன் மற்றும் தரவளை பகுதியிலும் அடையாளங்காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுதவிர வட்டவளை ஆடை தொழிற்சாலையில் பணியாற்றிய 74 பேருக்கு இதுவரையில் தொற்றுறுதியாகியுள்ளது.







இலங்கையில் அதிகமான கொரோனா நோயாளிகள் கம்பஹா மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு