21,Jun 2026 (Sun)
  
CH
இலங்கை செய்தி

கிளிநொச்சியில் கருணாவை சந்திக்க அரிவாளுடன் சென்ற நபர்

கூரிய ஆயுதத்துடன் கருணா அம்மானை சந்திக்க சென்ற நபர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவிக்கின்றனர்.

நேற்றைய தினம் முரசுமோட்டை பகுதியில் தங்கியிருந்த கருணா அம்மானை சந்திக்க சென்ற நபரை கடமையில் நின்ற காவல்துறை சோதனைக்குட்படுத்திய வேளை அவரிடமிருந்து குறித்த கூரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருவதாக காவல்துறை குறிப்பிடுகின்றனர்.

குறித்த கத்தி மற்றும் அரிவாள் ஆகியவற்றை வயலிற்கு பசளை இடுவதற்காக எடுத்து சென்றதாகவும், திரும்புகையில் கருண அம்மானை சந்தித்து செல்ல சென்றதாகவும் குறித்த சந்தேக நபர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.





கிளிநொச்சியில் கருணாவை சந்திக்க அரிவாளுடன் சென்ற நபர்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு