30,Apr 2024 (Tue)
  
CH
உலக செய்தி

இத்தாலியில் அதிகமான பறவைகள் இறந்துள்ளன

இத்தாலி தலைநகர் ரோமில், கொரோனா பரவல் காரணமாக இரவு 10 மணிக்கு மேல் வெடி வெடிக்க தடை விதிக்கப்பட்டதோடு ஊரடங்கும் அமுலில் இருந்தது.

இந்நிலையில் அதையும் மீறி பலர் வெடி வெடித்து புத்தாண்டை கொண்டாடினர்.

புதுவருட நாளன்று அதிகாலையில் ரோம் நகரில் மகிழுந்தில் சென்ற ஒருவர் சாலையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நூற்றுக்கணக்கான பறவைகள் செத்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

அதன்பின்னர் தனது கைபேசியில் அதனை வீடியோவாக பதிவு செய்து, சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்.

அந்தப் பதிவில், நண்பர்களே நூற்றுக்கணக்கான பறவைகள் செத்து மடிந்து கிடக்கின்றன. இதை பார்க்க சங்கடமாகவும் நம்ப முடியாதுமாக இருக்கின்றன, நாம் வெடித்த வெடிகள் தான் இதற்கு காரணம் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சர்வதேச விலங்கு பாதுகாப்பு அமைப்பு இந்தப் பறவைகள் இறந்ததற்கு வெடிகளே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் லோரோடானா டிக் லியோ கூறுகையில், பறவைகள் அதிக சத்தத்தால் பயந்து இறந்திருக்கலாம், மேலும் நாம் வெடி வெடிக்கும் போது பறந்துகொண்டிருந்த பறவைகள் திடீரென்று ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளும். சுவரிலே, மின்கம்பத்தில்லோ, ஜன்னல்களில் மோதிக்கொள்ளும், மாரடைப்பு வந்து இறந்திருக்கலாம் என கூறினார்.

இந்த நிலையில் பறவைகள் உயிரிழந்த சம்பவமானது இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் சோகத்தை உருவாக்கியுள்ளது.





இத்தாலியில் அதிகமான பறவைகள் இறந்துள்ளன

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு