மூலிகைச் செடிகளில் சிறந்த மருத்துவ குணம் கொண்டது துளசி. ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் நான்கைந்து துளசி இலைகளை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
நீரிலும் துளசி இலைகளைப் போட்டு லேசாக கொதிக்கவைத்து பின்னர் அந்த நீரை பருகலாம்.
காய்ச்சல், தொண்டைப்புண் ஆகியவற்றுக்கு துளசி நீர் நல்ல பலனைத் தரும்.
தலைவலி அதிகமாக இருக்கும்பட்சத்தில் துளசி இலையை அரைத்து பற்றுப்போட தலைவலி காணாமல் போகும்.
கண் பிரச்னைகள் பலவற்றுக்கும் துளசி இலை பெரிதும் பயன்தரும்.
துளசி இலைகளை தொடர்ந்து சாப்பிடும்பட்சத்தில் வாய் துர்நாற்றம் உள்ளிட்ட பிரச்னைகள் நீங்கும். சளி, இருமல் இருந்தாலும் துளசி இலைகளை அப்படியே சாப்பிட்டு வர அல்லது துளசி நீரை அருந்திவர ஒரு சில நாள்களில் மாற்றத்தை உணர முடியும்.
நீரிழிவு, சிறுநீரகப் பிரச்னைகளுக்கும் துளசிச் சாறு பலனளிக்கும்
0 Comments
No Comments Here ..