15,Jan 2025 (Wed)
  
CH
ஆரோக்கியம்

இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் வேண்டாம்!

நம் உடலில் ஒரு பிரச்னை என்றால் அது திடீரென்று உருவாவதில்லை. ஒரு நாள் நீங்கள் தூங்காமலிருந்தால் அடுத்த நாள் சுறுசுறுப்பாக உங்களால் வேலை செய்ய இயலாது. அதுபோல அன்றாடம் நீங்கள் செய்யும் வேலைகளில் கவனம் செலுத்த முடியவில்லை என்றாலோ, வலி, அரிப்பு, மன உளைச்சல் ஏற்பட்டாலோ உடனடியாக உங்கள் உடல் அனுப்பும் தகவல்களைக் கவனியுங்கள். ஏனெனில் உடல் உறுப்புகளில் சிறிய பாதிப்பு வந்தாலும் அந்த செய்தியை உடல் உங்களுக்கு அனுப்பிவிடும்.

நம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, உடலின் ஆரோக்கியத்தைக் காக்க பல வகைகளில் துணைபுரிவது நம் சிறுநீரகம் தான்.

ஆனால் இன்றையகாலத்தில் பலர் சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வருகின்றார்கள்.

அதிலும் சிலருக்கு பலர் தங்களுக்கு சிறுநீரகம் பாதிப்பு அடைந்துள்ளது என்பதையே அறியாமல் இருக்கிறார்கள்.

நோய் முதிர்ச்சியடையும் நிலையில்தான் அவர்கள் தெரிந்துகொள்கிறார்கள். இதை, வளரவிடக் கூடாது. அப்படி வளர்ந்தால் டயாலிசிஸ், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை என பல பெரிய சிகிச்சைகளைச் செய்ய வேண்டி வரும்.

அதோடு முன்கூட்டியே ஒருவர் சிறுநீரக நோயை கண்டறிந்துவிட்டால், எளிதில் அவற்றை குணமாக்கவும் முடியும்.

ஆகவே ஒருவர் சிறுநீரக நோயின் ஆரம்ப கால அறிகுறிகளை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

அந்தவகையில் தற்போது சிறுநீரக நோயைச் சுட்டிக்காட்டக்கூடிய சில ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகளைக் என்ன என்பதை பார்ப்போம்.

  • நீங்கள் எந்நேரமும் சோர்வுடன் இருப்பதை உணர்ந்தால், அது சிறுநீரக நோயின் அறிகுறிகளுள் ஒன்று. சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருந்தால், அது எரித்ரோபொய்டின் என்னும் ஹார்மோனை உருவாக்குகின்றன. சிறுநீரகங்கள் சரியாக செயல்படாமல் இருந்தால், இந்த ஹார்மோன்கள் குறைவாக சுரக்கப்படும். இதனால் உடலுறுப்புக்களுக்கு ஆக்ஸிஜனைச் சுமக்கும் சிவப்பு இரத்த அணுக்களின் அளவு குறைந்து, விரைவில் சோர்வடையச் செய்யும்.
  • மற்றவர்கள் மிகவும் வெதுவெதுப்பான சூழலை உணரும் போது, நீங்கள் மட்டும் மிகவும் குளிர்ச்சியாக இருப்பதை உணர்ந்தால், அது சிறுநீரகத்தில் உள்ள பிரச்சனைக்கான அறிகுறிகளுள் ஒன்று.
  • மூச்சுத் திணறல் இரண்டு வழிகளில் சிறுநீரகங்களுடன் தொடர்புடையது. முதலில், நுரையீரலில் அதிகளவிலான திரவம் தேங்கியிருப்பது. மற்றொன்று உடலில் ஆக்ஸிஜனைச் சுமக்கும் சிவப்பு இரத்த அணுக்களின் அளவு குறைவாக இருப்பது. இதன் விளைவாகவே சிறுநீரக நோய் உள்ளவர்கள் மூச்சு விடுவதில் சிரமத்தை சந்திக்கிறார்கள்.
  • இரத்த சோகை தொடர்பான சிறுநீரக செயலிழப்பு என்றால் போதுமான ஆக்ஸிஜனைச் சுமக்கும் சிவப்பு இரத்த அணுக்கள் மூளைக்கு கிடைப்பதில்லை என்று அர்த்தம். இதன் விளைவாக இது தலைச்சுற்றல், மயக்கம் அல்லது பலவீனத்திற்கு வழிவகுக்கிறது.
  • எப்போது சிறுநீரங்கள் இரத்தத்தில் இருந்து கழிவுகளை பிரித்து எடுக்கும் செயலை சரிவர செய்யாமல் இருக்கிறதோ, அப்போது இரத்தத்தில் நச்சுக்களின் அளவு அதிகரித்து, கடுமையான சரும அரிப்பை உண்டாக்குகின்றன.
  • சிறுநீரகங்கள் உடலில் உள்ள அதிகப்படியான நீரை வெளியேற்றாத பட்சத்தில், உடலில் நீர்த்தேக்கம் ஏற்பட்டு, அதன் விளைவாக கால்கள், கணுக்கால், பாதம் மற்றும் கைகள் வீக்கமடைந்து காணப்படும்.
  • பொதுவாக சிறுநீரகங்கள் உடலில் இருந்து அதிகப்படியான நீரை வெளியேற்றாமல் இருந்தால், அது உடலில் கெட்ட நீரை தேங்கச் செய்து, முகம் வீங்கி காண வழிவகுக்கும். எனவே இம்மாதிரியான பிரச்சனையை சந்திக்கும் போது கவனமாக இருங்கள்.
  • உங்கள் வாய் கடுமையான துர்நாற்றத்துடன் இருந்தால் அப்படியானால் சிறுநீரகங்களில் உள்ள பிரச்சனையால், அவை இரத்தத்தில் உள்ள நச்சுக்களை சரியாக வெளியேற்றாமல் இருக்கிறது என்று அர்த்தம்.
  • சிறுநீர் கழிக்கும் அளவு மற்றும் சிறுநீர் கழிக்கும் முறையில் மாற்றத்தைக் கண்டால், அதுவே சிறுநீரக நோயின் முதல் அறிகுறியாகும். சிலர் அடிக்கடி சிறுநீர் கழிக்கச் செல்வார்கள் ஆனால் சிறுநீர் கழிக்கும் போது சிரமத்தை சந்திப்பார்கள். அதோடு சிறுநீர் அடர் நிறத்தில், இரத்தம் கலந்து, வலி அல்லது எரிச்சலுடன் சிறுநீரைக் கழிக்கக்கூடும்.
  • சிறுநீரக நோய் அல்லது சிறுநீரக தொற்றுக்கள் இருந்தால் கீழ் முதுகு பகுதி மற்றும் அடிவயிற்றின் இரண்டு புறத்திலும் வலியை சந்திக்கக்கூடும். சிறுநீர் குழாயில் கற்கள் இருந்தால், முதுகு வலி ஆரம்பித்து அது அப்படியே இடுப்பு பகுதியிலும் வலியை பரப்பக்கூடும்.





இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் வேண்டாம்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு