04,Jul 2025 (Fri)
  
CH
சினிமா

ரியோவை கோமாளி என்று கமண்ட் செய்த ரசிகர்கள்

பிக் பாஸ் ரியோவை கோமாளி என கமெண்ட் செய்தவர்களுக்கு அவரது மனைவி ஸ்ருதி ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி 90 நாட்களை கடந்து இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது . இந்த வாரம் நடைபெற்று வரும் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கில் வெற்றி பெறுபவர் நேரடியாக இறுதி வாரத்திற்கு தகுதி பெறுவர். இதில் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் ரியோ அதிக மதிப்பெண்ணில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் ரியோவை கோமாளி என விமர்சித்த ரசிகருக்கு ரியோவின் மனைவி ஸ்ருதி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 'ரியோவை கோமாளி என கமெண்ட் செய்துள்ளதை பார்த்தேன். அதில் எனக்கு மிகுந்த சந்தோசம் .

தன் கவலைகளை மறந்து மற்றவர்களை சிரிக்க வைப்பதற்காக போராடும் ஒரு நபரை நான் நேசிக்கிறேன் என்பதில் எனக்கு பெருமைதான். ஒருவரை சிரிக்க வைப்பது அவ்வளவு எளிதல்ல‌. ஒரு சிறந்த பொழுதுபோக்கு கலைஞருக்கு கிடைக்கக்கூடிய மிகப் பெரிய பட்டம் தான் கோமாளி‌. எனவே நீ கோமாளியாகவே இரு.  மற்றவர்களுக்கு ஒரு ஊன்றுகோலாக நீ இரு. ரியோவை கோமாளி என அழைக்கும் அனைவரும் அவரது நகைச்சுவை உணர்வை தான் பாராட்டுகிறார்கள். எனவே நீங்கள் சொல்லும் கருத்துக்களை நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன்' என பதிலடி கொடுத்துள்ளார் 




ரியோவை கோமாளி என்று கமண்ட் செய்த ரசிகர்கள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

Today Politician

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு