02,May 2024 (Thu)
  
CH
உலக செய்தி

உலக பணக்காரர்கள் பட்டியலில் திடீர் மாற்றம்

மின்னல் வேக ஹைப்பர் லூப் பயணம், செவ்வாயில் மனிதர்களை குடியேற்றும் முயற்சி, அதிவேக எலெக்ட்ரிக் சூப்பர் கார்களை தயாரிப்பது என பல்வேறு கனவுத் திட்டங்களின் கதாநாயகனாக திகழ்கிறார் எலான் மஸ்க்.

கடந்த சில வாரங்களாக உலக பணக்காரர்கள் வரிசையில் இவர் இரண்டாவது இடத்தில் இருந்தார்.

இந்நிலையில், எலான் மஸ்கின் சொத்து மதிப்பு நியூயார்க்கில் நேற்று காலை 10.15 மணிக்கு 188.5 பில்லியன் டொலராக இருந்தது. இது அமேசான் நிறுவனர் ஜெப் பெசோசைவை விட 1.5 பில்லியன் டாலர் அதிகமாகும்.

டெஸ்லாவின் பங்கு அதிவேக வளர்ச்சியில் செல்வதால் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பும் உயர்ந்து கொண்டு செல்கிறது. கடந்த ஆண்டு மட்டும் டெஸ்லாவின் பங்குகள் 743 சதவீதம் உயர்ந்துள்ளது.

ஜெப் பெசோஸ் கடந்த 2017 ஒக்டோபர் மாதம் முதல் உலக பணக்காரர் பட்டியலில் தொடர்ந்து முதலிடம் வகித்துவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.





உலக பணக்காரர்கள் பட்டியலில் திடீர் மாற்றம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு