21,May 2024 (Tue)
  
CH
இலங்கை செய்தி

யாழ்பல்கலைக்கழகத்தில் நினைவுத் தூபி உடைத்தமை தொடர்பாக வடகிழக்கு தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு

கோட்டாபய அரசின் கொடூர ஆட்சியில் தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமையை மறுப்பதற்கு எதிராக பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்து அகற்றப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் திங்கட்கிழமை(11) வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் கிளிநொச்சியில் வைத்து இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாகவே இந்த தூபி அமைக்கப்பட்டது. எனவே இதனை துணைவேந்தர் அழித்தமை கவலையளிப்பதாக உள்ளது. இந்த சம்பவத்திற்கு இந்தியாவிலிருந்து கூட தலைவர்கள் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

எனவே இந்த சம்பவத்தை கண்டித்து எதிர்வரும் 11 ஆம் திகதி பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படவுள்ளதாகவும் இதற்கு ஆதரவாக வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களை மூடி ஆதரவை வழங்க வேண்டுமெனவும் முஸ்லிம்களும் இதற்கு ஆதரவளிக்க வேண்டுமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.





யாழ்பல்கலைக்கழகத்தில் நினைவுத் தூபி உடைத்தமை தொடர்பாக வடகிழக்கு தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு