அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் சமூக வலைதள கணக்குகள் நிரந்திரமாக முடக்கப்பட்டதற்கு, ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், மேலும் வன்முறையை தூண்டும் ஆபத்து உள்ளதால் அவரின் கணக்கு நிரந்தரமாக முடக்கப்படுவதாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.
முன்னதாக, அமெரிக்க நாடளுமன்றத்தின் மீது டிரம்பின் ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை அடுத்து அவரது ட்விட்டர் கணக்கு 12 மணிநேரத்திற்கு முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியானது.டொனால்ட் டிரம்பின் கணக்கை ட்விட்டர் மற்றும் பிற சமூக வலைதள நிறுவனங்கள் நீக்கியுள்ளது பிரச்சினைக்குரியது என ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் நம்புவதாக அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.ஏனெனில் கருத்துத் சுதந்திரத்தை ஆன்லைன் தளங்களின் முதலாளிகளால் தீர்மானிக்கப்படக்கூடாது.கருத்துச் சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமை என்பது அடிப்படை முக்கியத்துவத்தின் அடிப்படை உரிமையாகும்.ஆனால் சட்டத்தின் மூலமாகவும், சட்டமன்றத்தால் வரையறுக்கப்பட்ட கட்டமைப்பினால் மட்டுமே இந்த அடிப்படை உரிமையில் தலையிட முடியும். சமூக ஊடக தளங்களின் நிர்வாகத்தினால் அல்ல என ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கலின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
0 Comments
No Comments Here ..