தூக்கமின்மை பிரச்சினையால் வயது வித்தியாசமின்றி பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர்.
சில உணவு பொருட்களை சரியான சமயத்தில் சாப்பிடுவதன் மூலம் நல்ல தூக்கத்தை பெற முடியும்.
நடைப்பயிற்சி, யோகா செய்பவர்கள் பால் பருகி வந்தால் எந்த இடையூறுமின்றி நன்றாக தூங்கி எழலாம். இரவு குறைவாக சாப்பிடுவதே நல்லது. ஓட்ஸ் உணவை சாப்பிட்டுவந்தால் ஆரோக்கியம் மேம்படுவதோடு ஆழ்ந்த தூக்கத்தையும் தூண்டும்.தூக்கமின்மை பிரச்சினைக்கு ஆளாகுபவர்கள், வாழைப்பழத்தையும் சாப்பிடலாம். அதிலும் டிரிப்டோபன் அமினோ அமிலம் நிறைந்திருக்கிறது. இது மூளைக்கு சமிக்ஞை கொடுத்து தூக்கத்தை வரவழைக்க செய்யும் வேதிப்பொருட்களை உருவாக்க உதவும்.
நடைப்பயிற்சி, யோகா செய்பவர்கள் பால் பருகி வந்தால் எந்த இடையூறுமின்றி நன்றாக தூங்கி எழலாம். இரவு குறைவாக சாப்பிடுவதே நல்லது. ஓட்ஸ் உணவை சாப்பிட்டுவந்தால் ஆரோக்கியம் மேம்படுவதோடு ஆழ்ந்த தூக்கத்தையும் தூண்டும். அதில் மன அழுத்தத்தை குறைக்கும் வைட்டமின் பி6 சத்தும் நிறைந் திருக்கிறது.
தூங்க செல்வதற்கு முன்போ அல்லது பகல் வேளையிலோ சிறிதளவு பாதாம் சாப்பிட்டுவந்தால் தூக்கத்தை மேம்படுத்தும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தூக்கத்தை ஒழுங்குபடுத்தும் ஹார்மோனான ‘மெலடோன்’ மற்றும் தூக்கத்தை ஊக்குவிக்கும் கனிமமான ‘மெக்னீசியம்’ இதில் ஏராளம் இருக்கிறது
0 Comments
No Comments Here ..