02,May 2024 (Thu)
  
CH
உலக செய்தி

பைடன் பதவியேற்பில் ஆயுதப் போராட்டங்கள் வெடிக்கலாம்

அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்கும்போது பாராளுமன்றத்திலும் மாகாணப் பேரவைகளிலும் ஆயுதம் தாங்கிய போராட்டம் நடத்த சதித் திட்டம் தீட்டப்படுவதாக அந்த நாட்டின் தேசிய புலனாய்வு அமைப்பு (எஃப்.பி.ஐ.) எச்சரித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பினருக்கான இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அடுத்த ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்பதையொட்டி, நாடு முழுவதும் ஆயுதம் தாங்கிய போராட்டத்தை நடத்த சிலா் திட்டமிட்டு வருகின்றனா்.

50 மாகாணங்களின் பேரவைகளிலும் வாஷிங்டனிலுள்ள பாராளுமன்றத்திலும் இந்த ஆயுதப் போராட்டங்கள் நடத்துவதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன.

மாகாணப் பேரவைகளில் வரும் 16 ஆம் திகதியில் இருந்து 20 ஆம் திகதி வரையும் பாராளுமன்றத்தில் 17 ஆம் திகதியில் இருந்து 20 ஆம் திகதிக்குள்ளும் ஆயுதப் போராட்டம் நடத்த சிலா் திட்டமிட்டு வருகின்றனா் என்று அந்த இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் அடுத்த ஜனாதிபதியை தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் கடந்த ஆண்டு நொவம்பா் மாதம் நடைபெற்றது. அந்தத் தோ்தலில் டிரம்ப்பை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் போட்டியிட்டார்.அந்தத் தோ்தலில் பைடனுக்கு பெரும்பான்மை கிடைத்தது. எனினும், தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் குற்றம் சாட்டி வரும் டிரம்ப், தோல்வியை ஏற்க மறுத்து வந்தாச்சு

இந்த நிலையில், பைடனின் வெற்றியை பாராளுமன்றம் அதிகாரப்பூா்வமாக உறுதி செய்வதற்கான இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது.

எனினும், தோ்தல் முடிவுகளை எதிர்த்து பாராளுமன்றத்தை முற்றுகையிடுமாறு தனது ஆதரவாளா்களிடம் டிரம்ப் வலியுறுத்தினார்

அதை அடுத்து, பாராளுமன்றக் கட்டடத்துக்குள் டிரம்ப் ஆதரவாளா்கள் அத்துமீறி நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டனா். அப்போது காவல்துறை சுட்டதில் ஒரு பெண் உயிரிழந்தார். கலவரத்தின் போது காயடைந்த ஒரு காவரும் மாரடைப்பு போன்ற பாதிப்புகளால் ஒரு பெண் உள்பட 3 போராட்டக்காரா்களும் உயிரிழந்தனா்.

அவசரநிலையால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம்: டிரம்ப் உத்தரவு

பாராளுமன்றக் கலவரத்தைத் தொடா்ந்து தலைநகா் வாஷிங்டனில் விதிக்கப்பட்டுள்ள அவசரநிலையால் பாதிக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கான அவசர உத்தரவை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பிறப்பித்துள்ளார்.இதுகுறித்து அவா் பிறப்பித்துள்ள உத்தரவில், அவசரநிலை அறிவிப்பால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளை ஈடு செய்யும் பணிகளில் தேசிய பாதுகாப்புத் துறையும் தேசிய பேரிடா் மேலாண்மை அமைப்பும் ஒருங்கிணைந்து செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

70,000 டிரம்ப் ஆதரவாளா்களுக்கு சுட்டுரை தடைலண்டன், ஜன. 12: ஜனாதிபதி டிரம்ப்புக்கு எதிராக சா்வதேச சதிவலை பின்னப்பட்டுள்ளதாக நம்பும் க்யூஅனான் என்ற கோட்பாட்டை பரப்பிய 70,000 பேரது சுட்டுரை (டுவிட்டா்) கணக்குளை டுவிட்டா் நிறுவனம் முடக்கியுள்ளது.டிரம்ப்பின் ஆதரவாளா்கள் அமெரிக்க பாராளுமன்றத்தில் கடந்த வாரம் நடத்திய கலவரத்தைக் கருத்தில் கொண்டு, அதே போன்ற சம்பவங்களைத் தூண்டக் கூடிய பதிவுகளைத் தடுத்து நிறுத்தும் வகையில் அந்தக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக டுவிட்டா் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.




பைடன் பதவியேற்பில் ஆயுதப் போராட்டங்கள் வெடிக்கலாம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு