கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, இலங்கை உள்ளிட்ட 11 ஆசிய நாடுகளிலிருந்து வருகைதரும் வெளிநாட்டவர்களுக்கு தற்காலிகமாக தடை விதிக்க ஜப்பான் தீர்மானித்துள்ளது.
இந்த நடைமுறையான ஜப்பானிய பிரஜைகள் அல்லாத வெளிநாட்டவர்களுக்கே, விசேடமாக அமுலாகும் என அந்த நாட்டு பிரதமர் யொஸிஹைட் சுகா தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 31 ஆம் திகதிவரை இந்தத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
சீனா, சிங்கப்பூர், மலேசியா, வியட்நாம், தென்கொரியா, தாய்வான், ஹொங்கொங், மியன்மார், தாய்லாந்து மற்றும் கம்போடியா உள்ளிட்ட நாடுகள், ஜப்பானினால் வெளிநாட்டவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள ஏனைய நாடுகளாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..