21,May 2024 (Tue)
  
CH
இலங்கை செய்தி

சிரியாவில் நியமிக்கப்பட்டதைப் போன்றே இலங்கை தொடர்பிலும் ஆதாரங்களை தேடும் பொறிமுறை ஒன்றை ஐக்கிய நாடுகள் சபை நியமிக்க வேண்டும்

சிரியாவில் நியமிக்கப்பட்டதைப் போன்றே இலங்கை தொடர்பிலும் ஆதாரங்களை தேடும் பொறிமுறை ஒன்றை ஐக்கிய நாடுகள் சபை நியமிக்க வேண்டும் என்று, தமிழ் தேசியப்பரப்பில் இயங்குகின்ற கட்சிகளும் சிவில் சமுக அமைப்புகளும் ஒன்றிணைந்து கோரிக்கை விடுத்துள்ளன.

இதுதொடர்பான கூட்டறிக்கை ஒன்றை அந்தகட்சிகள் நேற்று வெளியாக்கியுள்ளன.

இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின், தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, ஆகிய கட்சிகளுடன், பல்வேறு சிவில் சமுக அமைப்புகளும் கைச்சாத்திட்டுள்ளன.

இலங்கையின் உள்நாட்டுப் பொறிமுறை ஒன்று சாத்தியப்படாது என்பது புலனாகி இருக்கிறது.

இலங்கை தொடர்பாக பல்வேறு கட்டங்களில் ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் மாநாட்டில் மேற்கொண்ட தீர்மானங்களும் குறிப்பிடதக்க முன்னேற்றத்தைத் தரவில்லை.

இந்ததீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டிருந்த விடயங்கள் எவற்றையும் இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தி இருக்கவில்லை.

இந்தநிலையில், இந்த விடயத்தை சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு கொண்டு செல்லும் வகையில்,ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை மற்றும் பொதுசபை போன்றவற்றுக்கு பாரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன், இந்தவிடயம் தொடர்பான மனித உரிமைகள் ஆணையாளர், ஐக்கிய நாடுகளின் பொதுசெயலாளருக்கு விளக்கமளிக்க வேண்டும்.

மேலும் இலங்கையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை தங்களது மேற்பார்வையின் கீழ் வைத்துக் கொள்ளும் வகையில், பிரதிநிதி ஒருவரை நியமித்து, தற்போது சிறுபான்மையினருக்கு எதிராக இடம்பெறுகின்ற நிகழ்வுகள் குறித்து கண்காணிக்க வேண்டும்.

அத்துடன், சிரியாவில் போர்க்குற்றங்கள் குறித்து ஆதாரங்களை சேகரிப்பதற்காக நியமிக்கப்பட்டதைப் போன்ற பொறிமுறை ஒன்றை இலங்கை தொடர்பாகவும் உருவாக்கி, ஒருவருடத்துக்குள் ஆய்வறிக்கை ஒன்றை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த கூட்டறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.




சிரியாவில் நியமிக்கப்பட்டதைப் போன்றே இலங்கை தொடர்பிலும் ஆதாரங்களை தேடும் பொறிமுறை ஒன்றை ஐக்கிய நாடுகள் சபை நியமிக்க வேண்டும்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு