06,May 2024 (Mon)
  
CH
உலக செய்தி

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் மக்களுக்கு பொலிசார் விடுத்துள்ள எச்சரிக்கை

கடுமையான பனிப்பொழிவு காரணமாக, தேவையற்ற பயணங்கள் தவிர்க்கும் படி பொலிசார் மக்களுக்கு எச்சரித்துள்ளனர்.

கொரோனா பரவலுக்கிடையே பிரான்சில் இப்போது பனிப்பொழிவு அதிகமாகிவிட்டது. ஒவ்வொரு மணி நேரத்திற்கும், பல மாவட்டங்களில் பனிப்பொழிவு மற்றும் பனி வழுக்கல் அதிகமாக இருப்பதால், பிரான்ஸின் வானிலை மையம் 32 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், தலைநகர் பாரிசில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால், தேவையற்ற பயணங்கள், மற்றும் பரிசிற்குள் வருவதையும், தவிர்க்கும் படி பாரிசின் காவற்துறைத் தலைமையகம் மற்றும் மாவட்ட ஆணையம் எச்சரித்துள்ளது. கடுமையான பனிவீழ்ச்சியினால், பாரிஸ் மாவட்ட ஆணையம், எச்சரிக்கை நிலை 2 இனைப் பிரகடணப்படுத்தி உள்ளது.

வீதிகளிலும், வீதியோரங்களிலும், பனிச்சறுக்கல் ஏற்படாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளைப் பரிஸ் மாநகரசபையும் மாவட்ட ஆணையமும் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால் தேவையற்ற வகையில் தலைநகரில் நடமாடுவது, மேலும் நிலைமையயை மோசமாக்கும் எனவும், பரிஸ் மாவட்ட ஆணையம் தெரிவித்துள்ளது.




பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் மக்களுக்கு பொலிசார் விடுத்துள்ள எச்சரிக்கை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு