இந்தோனேசியாவின் பாலி தீவு அருகே 65 பேருடன் சென்ற படகு விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதுடன், 38 பேரைக் காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்குள்ளான படகில் 53 பயணிகள், 12 பணியாளர்கள் மற்றும் 14 லாரிகள் உட்பட 22 வாகனங்கள் இருந்துள்ளன. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் 20க்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளனர்.
காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், இதனால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.
0 Comments
No Comments Here ..