20,Jun 2026 (Sat)
  
CH

சீகிரியாவைச் சுற்றியுள்ள அங்கீகரிக்கப்படாத கட்டிடங்கள் அகற்றப்படும்: தொல்பொருள் திணைக்களம்

இலங்கையின் உலகப் பாரம்பரியச் சிறப்புமிக்க சீகிரியா தளத்தைப் பாதுகாக்கும் நோக்கில், அதனைச் சுற்றி அங்கீகரிக்கப்படாமல் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டி. துசித மென்டிஸ் தெரிவித்துள்ளார்.


தற்போது சீகிரியா யுனெஸ்கோவின் உலக பாரம்பரியப் பட்டியலில் இருந்து நீக்கப்படும் உடனடி அச்சுறுத்தலில் இல்லை என்றாலும், அங்கீகரிக்கப்படாத இந்தக் கட்டுமானங்கள் எதிர்காலத்தில் ஒரு கட்டுமானம் அச்சுறுத்தலாக மாறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளதாக மென்டிஸ் விளக்கமளித்துள்ளார்.


மத்திய மாகாணம், மாத்தளை மாவட்டத்தில் அமைந்துள்ள சீகிரியா, கி.பி. 5ஆம் நூற்றாண்டில் மன்னர் காசியப்பனால் கட்டப்பட்ட ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாகும். அதன் தனித்துவமான கட்டிடக்கலை, அழகிய சுவரோவியங்கள், பளபளப்பான கண்ணாடிச் சுவர் மற்றும் அரிய வரலாற்று எழுத்துகள் ஆகியவை உலகப் பாரம்பரியத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். 1982ஆம் ஆண்டு, சீகிரியா யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.




சீகிரியாவைச் சுற்றியுள்ள அங்கீகரிக்கப்படாத கட்டிடங்கள் அகற்றப்படும்: தொல்பொருள் திணைக்களம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு