வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்வது நாட்டை காட்டிகொடுக்கும் செயல் என கூறிய தரப்பினரே தற்போது வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளமை குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நல்லாட்சி அரசாங்கம் ஆரம்பித்த பொருளாதார கட்டமைப்பின் காரணமாக இவ்வாறு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பிரவேசிப்பதாக அவர் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்திற்கு வெளிநாட்டு முதலீட்டாளர்களை இணைப்பது தொடர்பில் நாட்டு பற்றுறுடையவராக தாம் மகிழ்ச்சியடைவதாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
0 Comments
No Comments Here ..