05,May 2024 (Sun)
  
CH
இந்திய செய்தி

இந்தியாவின் முதல் பெண் பிரதமர்இந்திரா காந்தி முதல் பெண் பிரதமரான நாள் இன்று

இந்தியாவின் மூன்றாவது பிரதமர் இந்திரா காந்தி, நாட்டின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் மகள். இந்திரா பிரியதர்சினி நேரு, ஃபெரோஸ் காந்தியை திருமணம் செய்துக் கொண்ட பிறகு இந்திரா பிரியதர்சினி காந்தியாக மாறினார், சுருக்கமாக இந்திரா காந்தி என்று அறியப்படுகிறார்.

1966 ஜனவரி 19 ஆம் திகதியன்று, இந்திரா காந்தி பதவியேற்றார். இந்தியாவின் முதல் பெண் பிரதமர் மட்டுமல்ல, இன்று வரை இந்தியாவின் (India) ஒரே பெண் பிரதமராக இருக்கிறார்.

ஆணாதிக்க மனப்பாங்கைக் கொண்ட இந்திய சமுதாயத்தில், தனது உறுதியான நிலைப்பாட்டினால் ‘இரும்பு பெண்மணி’ (Iron lady) என்று அழைக்கப்பட்டார் இந்திரா காந்தி. மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் (Atal Bihari Vajpayee) இந்திராவை பற்றி குறிப்பிடும்போது, ‘துர்காதேவி’ என்று சொன்னது அவர் இரும்புப் பெண்மணி என்பதை எதிர்கட்சியினரும் ஒப்புக் கொண்டதற்கான உதாரணம் ஆகும்

மேற்கு, கிழக்குப் பாகிஸ்தான்களுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சனையில், கிழக்குப் பாகிஸ்தானின் தனிநாட்டுக் கோரிக்கைக்கு ஆதரவு கொடுத்து, பாகிஸ்தானுடன் போர் நடத்தி, வங்காளதேசம் (Bangladesh) என்ற தனி நாட்டை உருவாக்குவதற்கு காரணமானவர் இந்திரா காந்தி.

1975 இல் அவசர நிலையை அறிவித்த இந்திரா காந்தி (Indira Gandhi), அரசியல் சட்டத்தின் 352 ஆவது விதியை பயன்படுத்தி தனக்கான அதிகாரங்களை அதிகப்படுத்திக் கொண்டதன் மூலம் எதிர்க்கட்சிகளை ஒடுக்க முயற்சித்தார் என்று குற்றம் சாட்டப்பட்டார். 19 மாதங்கள் நீடித்த இந்த நெருக்கடி நிலைமை இந்திரா காந்தியின் செல்வாக்கை பெருமளவு பாதித்தது. அடுத்து நடைபெற்ற தேர்தலில் தனது சொந்தத் தொகுதியிலேயே தோல்வியடைந்தார்.

இந்திரா காந்தியின் தோல்விக்குப் பிறகு ஆட்சி அமைத்த பல கட்சிக் கூட்டணி, உட்பூசல்கள் காரணமாக மூன்று ஆண்டுகளில் கவிழ்ந்தது. அடுத்து நடைபெற்ற தேர்தலில் இந்திரா காந்தி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தார்.




இந்தியாவின் முதல் பெண் பிரதமர்இந்திரா காந்தி முதல் பெண் பிரதமரான நாள் இன்று

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு