02,Jan 2026 (Fri)
  
CH
இலங்கை செய்தி

டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் வழக்கு விசாரணை

கொவிட் வைரஸ் தொற்றுக்கு மத்தியில் நாட்டில் நீதிமன்ற அலுவல்களை முறையாக முன்னெடுக்கும் நோக்கத்துடனும் டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படத்தப்படுவது ஆரம்பம் என்ற ரீதியில் காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக மேல்முறையீட்டு நீதிமன்ற வழக்கு நடவடிக்கைகள் நேற்று (18) தொடக்கம் ஆரம்பமாகின.

இதற்கமைவாக மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் 205, 110 மற்றும் 107 ஆகிய இலக்கம் கொண்ட அறைகளில் இந்த நடவடிக்கைகள் ஆரம்பமாகின.

இதற்காக வெலிக்கடை மற்றும் அங்குணகொலபெலஸ்ஸ ஆகிய சிறைச்சாலைகளில் இருந்து இணையத்தளத்தின் ஊடாக தேவையான தொடர்புகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த செயற்பாடுகள் Lanka government network இன் கீழ் 28 சிறைச்சாலை இடங்களில் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த புதிய வசதிகள் மூலம் இந்த சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் ஆஜர் படுத்தக்கூடியதாக இருக்கும்




டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் வழக்கு விசாரணை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு