19,May 2024 (Sun)
  
CH
சினிமா

ஆரிக்கு 35 இலட்சம் மட்டுமே பரிசுத் தொகை!

பிக்பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் ஆரி என்பதும் அவருக்கு டைட்டில் வின்னர் பரிசாக ரூ.50 லட்சம் கிடைத்தது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் அவருக்கு பரிசுத் தொகை மற்றும் பிக்பாஸ் வீட்டில் 105 நாட்கள் இருந்ததற்கான சம்பளம் ஆகியவை இரண்டும் சேர்த்து வரிப்பிடித்தம் போக மொத்தம் எவ்வளவு தொகை கிடைத்திருக்கிறது என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

பிக்பாஸ் வீட்டில் இருந்த நாட்களில் ஆரிக்கு தினமும் ரூபாய் 85 ஆயிரம் சம்பளம் என ஒப்பந்தம் பேசப்பட்டு இருந்ததாகவும், இதனை அடுத்து அவர் 105 நாட்கள் இருந்ததால் அவருடைய மொத்த சம்பளம் 89 லட்சத்து 25 ஆயிரம் வழங்கப்படும் என தெரிகிறது. இதில் 30 சதவீதம் வரிப்பிடித்தம் போக 62 லட்சத்து 42 ஆயிரத்து 500 ரூபாய் அவருக்கு சம்பளமாக கிடைக்கும்.

அதேபோல் அவருக்கு கிடைத்த 50 லட்சம் ரூபாய் டைட்டில் வின்னர் பரிசில் 30% வரிப்பிடித்தம் போக 35 லட்சம் கிடைத்துள்ளது. எனவே சம்பளம் மற்றும் டைட்டில் வின்னர் பரிசு ஆகியவை சேர்த்து ஆரிக்கு கிடைத்த மொத்த தொகை வரி பிடித்தம் போக ரூபாய் 97 லட்சத்து 47 ஆயிரத்து 500 என்பது குறிப்பிடத்தக்கது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஆரிக்கு கிட்டத்தட்ட ஒரு கோடி கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




ஆரிக்கு 35 இலட்சம் மட்டுமே பரிசுத் தொகை!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு