06,May 2024 (Mon)
  
CH
உலக செய்தி

விடைபெற்றுச்சென்றார் அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப்

அமெரிக்காவில் புதிய ஜனாதிபதி பதவி ஏற்றபின்பு டொனால்ட் ட்ரம்ப்  விடபெற்ற போது

மிகப்பெரும் சவால்கள், மிகவும் கடினமான போராட்டங்களை தாம் பொறுப்பெடுத்து செயற்பட்டதாகவும் அதற்காகவே மக்கள் தம்மை தெரிவு செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் நொவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகளை ஜனாதிபதி ட்ரம்ப் இன்னமும் முழுமையாக ஏற்றுக்கொள்ளவோ, தோல்வியை ஒப்புக்கொள்ளவோ இல்லை.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக இன்று பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.

இந்த நிலையில், பதவியேற்பு நிகழ்வுகளை முன்னிட்டு, அமெரிக்க தலைநகர் வொஷிங்டனில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

ஆயுதமேந்திய ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடு முழுவதும் போராட்டங்களில் ஈடுபடும் வாய்ப்பு காணப்படுவதாக, புலனாய்வு துறையினர் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த பதவியேற்பு நிகழ்வில் தான் கலந்துகொள்ளப் போவதில்லை என அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும், இன்றைய பதவியேற்பு நிகழ்வில், அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ் பதவியேற்கவுள்ளதுடன், ஏனைய அரசாங்க பிரதிநிதிகளும் பதவியேற்கவுளளனர்.




விடைபெற்றுச்சென்றார் அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு