05,May 2024 (Sun)
  
CH
உலக செய்தி

முகக்கவசம் அணியாதவர்களிற்கு நூதன தண்டனை: வைரல் வீடியோ!

இந்தோனேசியாவின் பாலித்தீவில் முகக்கவசம் அணியாமல் நடமாடிய வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிற்கு நூதனமான தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

பாலித்தீவு சுற்றுலாப்பயணிகளின் சொர்க்கபுரி. பல்வேறு நாடுகளில் இருந்தும் அதிகளவான சுற்றுலா பயணிகள் குவியும் இடம். அங்கு வரும் சுற்றுலா பயணிகள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றுவதில்லை. இதையடுத்து பொலிசார் விசேட நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக அங்குள்ள விடுதியொன்றில் பொலிசார் நடத்திய சோதனையில் 70 பேர் முகக்கவசம் அணியாமல் இருந்துள்ளனர். அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இலங்கை மதிப்பில் ரூ.1300 அபராதம் விதிக்கப்பட்டது.

70 பேரில் 40 பேர் அபராதம் கட்டியுள்ளனர். மீதி 30 பேர் தங்களிடம் அபராதம் கட்ட பணம் இல்லை எனச் சொல்லியுள்ளனர். இதையடுத்து அந்த 30 பேரில் உடமையில் கூட முகக்கவசத்தை வைத்திருக்காதவர்கள் 50 தண்டால் எடுக்கச் சொல்லியும், முகக்கவசம் சரியாக அணியாமல் இருந்தவர்களுக்கு 15 தண்டால் எடுக்கச் சொல்லியும் தண்டனை விதித்துள்ளனர். இந்த விடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பாலி பகுதியில் யார் முகக்கவசம் அணியாமல் வந்தாலும் அவர்கள் அபராதம் கட்ட தவறினால் இந்த தண்டால் தண்டனை தான் விதிக்கப்படும் என அந்நாட்டு பொலிசார் தெரிவித்துள்ளனர்.





முகக்கவசம் அணியாதவர்களிற்கு நூதன தண்டனை: வைரல் வீடியோ!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு