22,Jun 2026 (Mon)
  
CH
இலங்கை செய்தி

தமிழர்களின் அடையாளங்களை அழிக்கும் வேலையை நிறுத்துமாறு தொடர்பான கலந்துரையாடல் நாளை இடம்பெறவுள்ளது

தமிழர் தாயகத்தில் தமிழ் மக்களின் வாழ்வுரிமையை பறிக்கும், நிலங்களை தன் வயப்படுத்தல் செய்து, இன மத அடையாளங்களை  அழிக்க துரித கதியில் அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தும் வழிவகைகளை ஆராய, நாளை (24) காலை 10.00மணிக்கு கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

எம்.கே.சிவாஜிலிங்கத்தின் அழைப்பில் நேற்று, தமிழ் தேசிய கட்சியின் அலுவலகத்தில் நேற்று நடந்த கலந்துரையாடலில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

தமிழ் அரசு கட்சி, ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் மக்கள் கூட்டணி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

அரசு சாராத தமிழ் கட்சிகள், புத்திஜீவிகள், மத தலைவர்கள், பல்கலைகழக மாணவர்கள், சிவில் சமூகத்தினரை உள்ளடக்கிய ஆலோசனை கூட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டது.

இதனடிப்படையில் நாளை காலை 10 மணிக்கு தமிழ் கட்சிகள் மற்றம் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் கூட்டம் இடம்பெறும்.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் சுகாதார டைமுறையை பின்பற்றி கலந்து கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.




தமிழர்களின் அடையாளங்களை அழிக்கும் வேலையை நிறுத்துமாறு தொடர்பான கலந்துரையாடல் நாளை இடம்பெறவுள்ளது

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு