22,Jun 2026 (Mon)
  
CH
இலங்கை செய்தி

யாழ் கந்தரோடையில் உள்ள அம்மன் ஆலயக்கேணியை இராணுவத்தினர் கையகப்படுத்த திட்டம்

யாழ்ப்பாணம், கந்தரோடையிலுள்ள வற்றாக்கை அம்மன் ஆலய கேணியையும் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடமென்ற போர்வையில் இராணுவத்தினர் தலையீடு செய்வதற்கு பிரதேச மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

வற்றாக்கை அம்மன் ஆலயத்திற்கு எதிரில் தொன்மையான கேணியொன்று உள்ளது. அதனருகில் அரச மரம் உள்ளது.

இந்த நிலையில் நேற்று அங்கு சென்ற இராணுவத்தினர் அந்த பகுதியை வட்டமிட்டு நோட்டமிட்டனர். பின்னர் அந்த பகுதிகளை படம் பிடித்தனர். ஆலய பூசகரை தொடர்பு கொண்டு, அந்த காணி தனியார் காணியா அல்லது அரச காணியா என வினவினர்.

அது தனியார் காணியென பூசகர் பதிலளித்த பின்னரும், அது தொடர்பில் அவரை இராணுவத்தினர் துருவிதுருவி விசாரணை நடத்தினர்.

இதனால் பிரதேச மக்களிடையே அச்சநிலைமை தோன்றியுள்ளது.

இது குறித்து பிரதேச மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனிடம் முறையிட்டதன் அடிப்படையில், இன்று காலை அந்த பகுதிக்கு சென்று நிலைமைகளை கேட்டறிந்த கொண்டார்.

அவருடன் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், சுன்னாகம் பிரதேசசபை தவிசாளர் தர்சன் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு சென்றிருந்தனர்.





யாழ் கந்தரோடையில் உள்ள அம்மன் ஆலயக்கேணியை இராணுவத்தினர் கையகப்படுத்த திட்டம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு