இந்திய சுதந்திர போராட்ட வீரர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸை கௌவுரவிக்கும் வகையில், அவருக்கு நினைவு நாணயம் மற்றும் அஞ்சல் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார்.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125 வது பிறந்தநாள் கொண்டாட்டம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது, நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் நினைவு நாணயம் மற்றும் அஞ்சல் தலையையும் பிரதமர் மோடி வெளியிட்டார்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, நேதாஜிக்கு புகழாரம் சூட்டினார். மேற்கு வங்கம் நாட்டுக்கு தேசிய கீதத்தை வழங்கி இருப்பதாகவும், நேதாஜி காட்டிய வழியில் இந்தியா முன்னேற்றப் பாதையில் செல்வதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
அதே போல, நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாளை முன்னிட்டு மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பேரணி நடைபெற்றது. இதில், அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பேரணியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது பேசிய அவர், மத்திய அரசு சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாளை தேசிய விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும், இந்த கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றாமல் இருப்பது ஏன் என கேள்வி எழுப்பிய அவர், இந்தியாவுக்கு 4 தலைநகரங்கள் தேவை என மம்தா பானர்ஜி வலியுறுத்தினார்.
0 Comments
No Comments Here ..