22,Aug 2025 (Fri)
  
CH
உலக செய்தி

ஜூலை வரை ஊரடங்கு – 10 நாட்கள் தனிமைப்படுத்தல்!

கொரோனா வைரஸ் தொற்று கடந்த ஆண்டு தொடக்கத்தில் ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவியது. மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. ஆனால், பொது ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாட்டால் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வந்தது.

ஜெர்மனிக்கு அடுத்தப்படியாக இங்கிலாந்து பல்வேறு தளர்வுகளை அமல்படுத்தியது. இதனால் மக்கள் மெதுவாக சகஜ நிலைக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். பைசர் தடுப்பூசி, அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியும் நடைமுறைக்கு வந்தது.இந்த நிலையில்தான் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்தது. உருமாமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் மிகவும் தீவிரமாக பரவியது. இதனால் இங்கிலாந்து மீண்டும் பழைய நிலைக்கு தள்ளப்பட்டது. இதனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பலவேறு நாடுகள் இங்கிலாந்து உடனான விமான போக்குவரத்தை தற்காலிகமாக ரத்து செய்தது.

இந்த நிலையில் ஜூலை 17 ஆம் திகதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக இங்கிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள வெளிநாட்டில் இருந்து வரும் நபர்கள் 10 நாட்கள் கட்டாய கோரன்டைனில் இருக்க வேண்டும் என முடிவுக்க எடுக்கப்பட இருக்கிறது. இதுகுறித்து நாளை இறுதி முடிவு எடுக்கபட இருக்கிறது.

இந்த ஊரடங்கால் பப்புகள், ரெஸ்டாரன்ட்கள், மால்கள் போன்றவைகளும் மூடப்பட உள்ளது. இங்கிலாந்தில் நேற்று வரை 5.9 மில்லியன் மக்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

உருமாறிய கொரோனா தொற்றால் உயிரிழப்பு அதிகமாகும் அபாயம் உள்ளது என எச்சரித்துள்ள போரிஸ் ஜான்சன், தடுப்பூசி திட்டம் சரியான வகையில் வேலை செய்யும்வரை வரை ஊரடங்கை தளர்த்த வாய்ப்பில்லை எனத் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் நேற்ற வரை 97,329 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்




ஜூலை வரை ஊரடங்கு – 10 நாட்கள் தனிமைப்படுத்தல்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு