18,Feb 2026 (Wed)
  
CH
இலங்கை செய்தி

யாழில் தனியார் காணியை அபகரித்து விகாரைக்கு அடிக்கல் நாட்டினார் இராணுவத்தளபதி!

வலி.வடக்கு தையிட்டியில் தனியார் காணியில் விகாரை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று சமய வழிபாடுகளுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தையிட்டி மகாவித்தியாலயத்திற்கு பின்புறமாக- கலைவாணி வீதிக்கு அருகில் தனியார் காணியை ஆக்கிரமித்து திஸ்ஸ விகாரையென்ற பெயரில் இராணுவம் சட்டவிரோத விகாரை அமைத்திருந்தது.

அந்த விகாரையிலிருந்து சுமார் 75 மீற்றர்கள் தொலையில் மேலுமொரு கட்டுமானத்திற்கு, இன்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

வலிகாமம் வடக்கு பிரதேச செயலக ஒருங்கிணைப்புகுழு கூட்டம் நேற்று நடைபெற்ற போது, சட்டவிரோத விகாரை கட்டுமானங்களிற்கு தடைவிதிக்கும்படி தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பன வலியுறுத்திய போதும், ஒருங்கிணைப்புக்குழு தலைவர் அங்கஜன் இராமநாதன் அதற்கு மறுத்து விட்டார்.

இன்று தனியார் காணிகளை அபகரித்து விகாரை கட்டுமானத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்கு ஒத்தாசையாகவே நேற்று அங்கஜன் தடை தீர்மானத்தை நிறைவேற்ற மறுத்தாரா என்ற வலுவான கேள்வி எழுந்துள்ளது.




யாழில் தனியார் காணியை அபகரித்து விகாரைக்கு அடிக்கல் நாட்டினார் இராணுவத்தளபதி!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு