90களின் கனவுக்கன்னி என்றால் ஞாபகத்துக்கு வருவது இடுப்பழகி சிம்ரன் தான். இவர் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் என இந்திய சினிமா உலகில் ஒரு ரவுண்ட் அடித்து இருக்கிறார்.
மேலும் சிம்ரன் ‘ஒன்ஸ்மோர்’ என்ற திரைப்படத்தின் மூலம் தான் கோலிவுட்டில் கால்பதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், மாதவன் என அனைவருடனும் சிம்ரன் ஜோடி போட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து தனது சிறுவயது நண்பரான தீபக் பகாவை திருமணம் செய்து கொண்டு சினிமா வாழ்க்கைக்கு டாட்டா காட்டினார் சிம்ரன். தற்போது சிம்ரன் மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்து அவருடைய ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார்.
இந்த நிலையில் தற்போது தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதிலும் குறிப்பாக தற்போது சிம்ரன் தனது ட்விட்டர் பக்கத்தில் புடவையுடன் செல்பி எடுத்து இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
அதில், ‘சேலை அணிந்தால் கிடைக்கும் மகிழ்ச்சி, வேறு எதிலும் கிடைக்காது’ என்று அந்தப் புகைப்படத்துடன் ட்விட் செய்துள்ளார்.
இதில் சிம்ரனுக்கு 44 வயது என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். அந்த அளவிற்கு தனது இளமை மாறாமல் காட்சியளிக்கிறார். எனவே இந்த புகைப்படம் ஆனது சமூக வலைதளங்களில் அவருடைய ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.













0 Comments
No Comments Here ..