கீர்த்தி சுரேஷ் நடிப்பில் OTT தளத்தில் வெளியான மிஸ் இந்தியா, பென்குயின் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. சூப்பர் ஸ்டாருடன் அண்ணாத்த திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
அதுமட்டுமல்லாமல் செல்வராகவனுடன் சாணி காகிதம் எனும் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபகாலமாக மற்ற நடிகைகள் போல கீர்த்தி சுரேஷ் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
வீட்டில் இருந்து வெளியே வந்து காலடி வைத்து விட்டால் போதும் கீர்த்தி சுரேஷ் என்னென்ன செய்கிறாரோ அதை அனைத்தும் புகைப்படங்களாக எடுத்து சமூக வலைதள பக்கத்தில் வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
துபாய்க்கு சென்றதிலிருந்து குலோப்ஜாம் தின்ன வரைக்கும் புகைப்படங்களாக எடுத்து வெளியிட்டு ரசிகர்களுக்கு தெரியப்படுத்தினார். தற்போது தோல் நிறத்தில் இருக்கும் ஆடையை அணிந்துருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அதனை பார்த்த ரசிகர்கள் நம்ம கீர்த்தி சுரேஷ் வர வர டிசைன் டிசைனாக டிரஸ் போடுகிறாரப்பா என சமூக வலைதளங்களில் கிண்டலாக பேசி வருகின்றனர். மேலும் சில ரசிகர்கள் மேடம் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்து புகைப்படங்களை போடுங்க எனவும் கூறி வருகின்றனர்.
0 Comments
No Comments Here ..