மக்களுக்கு தாமதமான கட்டங்களில் தான் இந்த நோய் இருப்பது கண்டறியப்படுகின்றன. சில மார்பக செல்கள் வழக்கத்திற்கு மாறாக வளரத் தொடங்கி, ஒரு கட்டி போன்றவற்றை உருவாக்கும் போது இந்த வகையான புற்றுநோய் ஏற்படுகிறது. வழக்கமாக இது பால் உற்பத்தி செய்யும் நாளங்களில் (இன்வசிவ் டக்டல் கார்சினோமா) தொடங்குகிறது. ஆனால் இது லோபூல்ஸ் (இன்வசிவ் லோபுலர் கார்சினோமா) எனப்படும் சுரப்பி திசுக்களிலோ அல்லது மார்பகத்திற்குள் உள்ள, பிற செல்கள் அல்லது திசுக்களில் தொடங்கலாம்.
ஆண்கள் பெண்கள் ஆகிய இருவருக்கும் மார்பக புற்றுநோய் ஏற்படலாம் என்றாலும், இது பெண்களில் தான் அதிகம் காணப்படுகிறது. மார்பக புற்றுநோய்க்கான சரியான காரணம் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிப்பதில் மரபணு மாற்றங்கள், வாழ்க்கை முறை மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள் ஆகியவற்றின் பங்கு இருக்கக்கூடும்
ஆய்வாளர்களின் கூற்றுப்படி, ஒரு குடும்பத்தின் தலைமுறைகள் வழியாக, மரபணு மாற்றங்கள் காரணமாக சுமார் 5 முதல் 10 சதவீதம் மார்பக புற்றுநோய்கள் ஏற்படுகின்றன. அதிகப்படியான குடிப்பழக்கம், புகைபிடித்தல், ஈஸ்ட்ரோஜன் வெளிப்பாடு மற்றும் சில உணவு முறைகள் போன்ற வாழ்க்கை முறை காரணிகள் மார்பக புற்றுநோயின் அபாயத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கக் கூடும் உணவுகள் மற்றும் பானங்களின் பட்டியல்கள் உங்களுக்காக இங்கே கொடுக்கப்பட்டு உள்ளது.
ஆல்கஹால் பயன்பாடு, குறிப்பாக அதிகப்படியான குடிப்பழக்கம், ஈஸ்ட்ரோஜன் மற்றும் ' ஹார்மோன் ரெசெப்ட்டார் பாசிட்டிவ்' மார்பக புற்றுநோயுடன் தொடர்புடைய பிற ஹார்மோன்களின் அளவை அதிகரிக்கக் கூடும். ஆல்கஹால் ஆனது உயிரணுக்களில் உள்ள டி.என்.ஏ வை சேதப்படுத்தும். மேலும் இதன் காரணமாக, மார்பக புற்றுநோய் அபாயத்தை இது அதிகரிக்கும்.
அதிக துரித உணவை உட்கொள்வது உங்கள் உடல் எடையை அதிகரிக்கக் கூடும். மற்றும் நீங்கள் அதிக எடை அல்லது பருமனா உடலை பெற வாய்ப்பு உள்ளது. இது மார்பக புற்றுநோய் ஆபத்து காரணிகளில் ஒன்றாகும். மேலும், அதிக கொழுப்பு நிறைந்த உணவுகள் இதய நோய், நீரிழிவு நோய் போன்ற நோய்களின் அபாயத்துடன் தொடர்புடையது.
அதிகமான அளவில் வறுக்கப்பட்ட உணவுகளை உட்கொள்ளவது உங்கள் மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கக் கூடும். 620 ஈரானிய பெண்கள் மீது நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் மார்பக புற்றுநோய் வளர்ச்சிக்கு மிகப்பெரிய ஆபத்து காரணியாக வறுக்கப்பட்ட உணவு உட்கொள்ளல் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
தேசிய மருத்துவ நூலகத்தில் வெளியிடப்பட்ட ஒரு 2002 ஆய்வில், அதிகப்படியாக வறுக்கப்பட்ட சிவப்பு இறைச்சியை அதிக அளவில் உட்கொள்வது, மார்பக புற்றுநோயின் அபாயத்துடன் இணைக்கப்பட்டு உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ஹைட்ரஜனேற்றப்படாத சோயாபீன் எண்ணெயை அதிக வெப்பநிலை கொண்ட சமையலில் பயன்படுத்தாவிட்டால், இது மார்பக புற்றுநோயின் அபாயத்துடன் குறைந்த அளவு தொடர்புடையதாக இருக்கலாம்.
பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளான பன்றி இறைச்சி (பேக்கான்), சாஸேஜஸ் மற்றும் ஹாம் போன்றவற்றை அடிக்கடி சாப்பிடும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று மெட்டா-பகுப்பாய்வு (பல அறிவியல் ஆய்வுகளின் முடிவுகளை இணைக்கும் புள்ளிவிவர பகுப்பாய்வு) 2018 இல் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வில் தெரிவித்தது.
மார்பக புற்றுநோயைத் தடுப்பதற்காக பதப்படுத்தப்பட்ட இறைச்சியைக் குறைத்து கொள்வது நல்லது என்று ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் நிறுவனத்தின் முன்னணி எழுத்தாளர் டாக்டர் மரியம் ஃபார்விட் பரிந்துரைக்கிறார்.
அதிகப்படியான சர்க்கரையை உட்கொள்வது, உங்கள் உடல் எடையை அதிகரிக்கும் மற்றும் உடல் பருமனுக்கு வழிவகுக்கும், இது மார்பக புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு புற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கும். அதிக அளவு சர்க்கரையை கொண்ட உணவு, இன்ஃபிளாமேஷன், புற்றுநோய் வளர்ச்சி மற்றும் புற்றுநோய் பரவல் தொடர்பான சில என்சைம்களின் வெளிப்பாட்டையும் அதிகரிக்கக் கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் கொண்ட உணவு ஆனது, இரத்தத்தின் குளுக்கோஸ் அளவை அதிகரிக்கச் செய்யலாம். மேலும் வயிறு, மார்பக மற்றும் பெருங்குடல் புற்றுநோய்கள் உட்பட பல புற்றுநோய்களின் அபாயத்தை இது அதிகரிக்கும். வெள்ளை ரொட்டி மற்றும் அதிகம் சர்க்கரை கொண்டு வேகவைத்த அல்லது சுட்ட பொருட்கள் போன்ற சுத்திகரிக்கப்பட்ட கார்ப்ஸை உட்கொள்வதை நிறுத்துங்கள். மற்றும் முழு தானிய பொருட்கள் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
0 Comments
No Comments Here ..