15,Jan 2025 (Wed)
  
CH
சினிமா

நிர்வாணமான தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில்வெளியிட்டு சர்ச்சையை கிளப்பிய நடிகர்

நடிகர் மிலிந்த் சோமன் நிர்வாணமான தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு அது சர்ச்சைகளை உண்டாக்கியது.

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகர் மிலிந்த் சோமன். இவர் பையா, பச்சைக் கிளி முத்துச்சரம் போன்ற தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 4 ஆம் தேதி தனது 55 வது பிறந்தநாளை முன்னிட்டு தனது காதல் மனைவி அங்கிதாவுடன் கோவாவுக்குச் சென்றுள்ளார்.

அங்கு தனது பிறந்தமேனியுடன் இருக்கும் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, ’’ஹேப்பி பர்த்தே டு மீ’’ என்று தனக்குத்தானே பதிவிட்டு, இப்புகைப்படத்தை எடுத்த எனது மனைவிக்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படத்துக்கு எதிராக கண்டனங்கள் எழுந்ததை அடுத்து அவர் மேல் இப்போது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த் இப்போது பேசியுள்ள மிலிந்த் சோமன் ‘இந்திய கலாச்சாரம் என்பது மிகப்பரந்தது. இங்கு என்ன பிரச்சனை என்றால் தன் வீட்டில் உள்ளதும் தாங்கள் செய்வது மட்டுமே இந்தியக் கலாச்சாரம் என சிலர் புரிந்து கொள்வதுதான். அவர்களுக்காக நான் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன் அமெரிக்காவில் ஆடையின்றி திரிவது குற்றம். ஆனால் இந்தியாவில் பல இடங்களில் அது குற்றம் இல்லை. அதனால் தான் நான் சொல்கிறேன் அது இந்திய கலாச்சாரம் என்று’ எனக் கூறியுள்ளார்.





நிர்வாணமான தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில்வெளியிட்டு சர்ச்சையை கிளப்பிய நடிகர்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு